| 1 | இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். | மாற் 2:13 மாற் 4:1 |
| 2 | திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள். | மத் 4:25 மத் 15:30 ஆதி 49:10 லூக் 8:4-8 |
| 3 | அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். | மத் 13:10-13 மத் 13:34-13 மத் 13:35-13 மத் 13:53-13 மத் 22:1 மத் 24:32 நியா 9:8-20 2சாமு 12:1-7 சங் 49:4 சங் 78:2 ஏசா 5:1-7 எசே 17:2 எசே 20:49 எசே 24:3-14 மீகா 2:4 ஆபகூ 2:6 மாற் 3:23 மாற் 4:2 மாற் 4:13 மாற் 4:33 மாற் 12:1 மாற் 12:12 லூக் 8:10 லூக் 12:41 லூக் 15:3-7 யோவா 16:25 |
| 4 | அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. | மத் 13:18 மத் 13:19 |
| 5 | சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. | மத் 13:20 எசே 11:19 எசே 36:26 ஆமோ 6:12 சகரி 7:12 |
| 6 | வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. | மத் 13:21 ஏசா 49:10 யாக் 1:11 யாக் 1:12 வெளிப் 7:16 |
| 7 | சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. | மத் 13:22 ஆதி 3:18 எரே 4:3 எரே 4:4 மாற் 4:18 மாற் 4:19 |
| 8 | சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. | மத் 13:23 லூக் 8:15 ரோம 7:18 |
| 9 | கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். | மத் 13:16 மத் 11:15 மாற் 4:9 மாற் 4:23 மாற் 7:14-16 வெளிப் 2:7 வெளிப் 2:11 வெளிப் 2:17 வெளிப் 2:29 வெளிப் 3:6 வெளிப் 3:13 வெளிப் 3:22 வெளிப் 13:8 வெளிப் 13:9 |
| 10 | அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். | மாற் 4:10 மாற் 4:33 மாற் 4:34 |
| 11 | அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. | மத் 11:25 மத் 11:26 மத் 16:17 சங் 25:8 சங் 25:9 சங் 25:14 ஏசா 29:10 ஏசா 35:8 மாற் 4:11 லூக் 8:10 லூக் 10:39-42 யோவா 7:17 அப் 16:14 அப் 17:11 அப் 17:12 1கொரி 2:9 1கொரி 2:10 1கொரி 2:14 1கொரி 4:7 யாக் 1:5 யாக் 1:16-18 1யோவா 2:27 |
| 12 | உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். | மத் 25:29 மாற் 4:24 மாற் 4:25 லூக் 8:18 லூக் 9:26 லூக் 19:24-26 யோவா 15:2-5 |
| 13 | அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். | மத் 13:16 உபா 29:3 உபா 29:4 ஏசா 42:18-20 ஏசா 44:18 எரே 5:21 எசே 12:2 மாற் 8:17 மாற் 8:18 யோவா 3:19 யோவா 3:20 யோவா 9:39-41 2கொரி 4:3 2கொரி 4:4 |
| 14 | ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். | ஏசா 6:9 ஏசா 6:10 எசே 12:2 மாற் 4:12 லூக் 8:10 யோவா 12:39 யோவா 12:40 அப் 28:25-27 ரோம 11:8-10 2கொரி 3:14 |
| 15 | இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. | சங் 119:70 |
| 16 | உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். | மத் 5:3-11 மத் 16:17 லூக் 2:29 லூக் 2:30 லூக் 10:23 லூக் 10:24 யோவா 20:29 அப் 26:18 2கொரி 4:6 எபே 1:17 எபே 1:18 |
| 17 | அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். | லூக் 10:24 யோவா 8:56 எபே 3:5 எபே 3:6 எபிரெ 11:13 எபிரெ 11:39 எபிரெ 11:40 1பேது 1:10-12 |
| 18 | ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். | மத் 13:11 மத் 13:12 மாற் 4:14-20 |
| 19 | ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். | மத் 4:23 லூக் 8:11-15 லூக் 9:2 லூக் 10:9 அப் 20:25 அப் 28:23 ரோம 14:17 2கொரி 4:2 2கொரி 4:3 எபே 3:8 |
| 20 | கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; | மத் 13:5 மத் 13:6 |
| 21 | ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். | மத் 13:6 மத் 7:22 மத் 7:23 மத் 7:26 மத் 7:27 யோபு 19:28 நீதி 12:3 நீதி 12:12 லூக் 8:13 யோவா 6:26 யோவா 6:61-65 யோவா 6:70 யோவா 6:71 யோவா 15:5-7 அப் 8:21-23 கலா 5:6 கலா 6:15 எபே 3:17 2பேது 1:8 2பேது 1:9 1யோவா 2:19 1யோவா 2:20 |
| 22 | முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். | மத் 13:7 மாற் 4:18 லூக் 8:14 லூக் 18:24 2தீமோ 4:10 |
| 23 | நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். | மத் 13:8 மாற் 4:20 லூக் 8:15 |
| 24 | வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. | மத் 21:33 நியா 14:12 நியா 14:13 ஏசா 28:10 ஏசா 28:13 எசே 17:2 |
| 25 | மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். | மத் 25:5 ஏசா 56:9 ஏசா 56:10 அப் 20:30 அப் 20:31 கலா 2:4 2தீமோ 4:3-5 எபிரெ 12:15 2பேது 2:1 வெளிப் 2:20 |
| 26 | பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. | மாற் 4:26-29 |
| 27 | வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். | 1கொரி 3:5-9 1கொரி 12:28 1கொரி 12:29 1கொரி 16:10 2கொரி 5:18-20 2கொரி 6:1 2கொரி 6:4 எபே 4:11 எபே 4:12 |
| 28 | அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். | லூக் 9:49-54 1கொரி 5:3-7 2கொரி 2:6-11 1தெச 5:14 யூதா 1:22 யூதா 1:23 |
| 29 | அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். |
| 30 | அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். | மத் 13:39 மத் 3:12 மத் 22:10-14 மத் 25:6-13 மத் 25:32-13 மல்கி 3:18 1கொரி 4:5 |
| 31 | வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். | மத் 13:24 லூக் 19:11 லூக் 20:9 |
| 32 | அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார். | சங் 72:16-19 ஏசா 2:2-4 எசே 47:1-5 தானி 2:34 தானி 2:35 தானி 2:44 தானி 2:45 மீகா 4:1-3 சகரி 4:10 சகரி 8:20-23 சகரி 14:7-10 அப் 1:15 அப் 21:20 ரோம 15:18 ரோம 15:19 வெளிப் 11:15 |
| 33 | வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார். | மாற் 13:20 |
| 34 | இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. | மத் 13:13 மாற் 4:33 மாற் 4:34 |
| 35 | என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. | மத் 13:14 மத் 21:4 மத் 21:5 |
| 36 | அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள். | மத் 14:22 மத் 15:39 மாற் 6:45 மாற் 8:9 |
| 37 | அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; | மத் 13:24 மத் 13:27 |
| 38 | நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; | மத் 24:14 மத் 28:18-20 மாற் 16:15-20 லூக் 24:47 ரோம 10:18 ரோம 16:26 கொலோ 1:6 வெளிப் 14:6 |
| 39 | அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். | மத் 13:25 மத் 13:28 2கொரி 2:17 2கொரி 11:3 2கொரி 11:13-15 எபே 2:2 எபே 6:11 எபே 6:12 2தெச 2:8-11 1பேது 5:8 வெளிப் 12:9 வெளிப் 13:14 வெளிப் 19:20 வெளிப் 20:2 வெளிப் 20:3 வெளிப் 20:7-10 |
| 40 | ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். |
| 41 | மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து, | மத் 24:31 மாற் 13:27 எபிரெ 1:6 எபிரெ 1:7 எபிரெ 1:14 வெளிப் 5:11 வெளிப் 5:12 |
| 42 | அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். | மத் 3:12 மத் 25:41 சங் 21:9 தானி 3:6 தானி 3:15-17 தானி 3:21-17 தானி 3:22-17 மாற் 9:43-49 லூக் 16:23 லூக் 16:24 வெளிப் 14:10 வெளிப் 19:20 வெளிப் 20:10 வெளிப் 20:14 வெளிப் 20:15 வெளிப் 21:8 |
| 43 | அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். | மத் 25:34 மத் 25:36 தானி 12:3 1கொரி 15:41-54 1கொரி 15:58-54 வெளிப் 21:3-5 வெளிப் 21:22-5 வெளிப் 21:23-5 |
| 44 | அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான். | மத் 6:21 நீதி 2:2-5 நீதி 16:16 நீதி 17:16 நீதி 18:1 யோவா 6:35 ரோம 15:4 1கொரி 2:9 1கொரி 2:10 கொலோ 2:3 கொலோ 3:3 கொலோ 3:4 கொலோ 3:16 |
| 45 | மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. | மத் 16:26 மத் 22:5 நீதி 3:13-18 நீதி 8:10 நீதி 8:11 நீதி 8:18-20 |
| 46 | அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான். | நீதி 2:4 ஏசா 33:6 1கொரி 3:21-23 எபே 3:8 கொலோ 2:3 1யோவா 5:11 1யோவா 5:12 வெளிப் 21:21 |
| 47 | அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. | மத் 4:19 மாற் 1:17 லூக் 5:10 |
| 48 | அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். | மத் 13:30 மத் 13:40-43 மத் 3:12 |
| 49 | இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, | மத் 13:39 மத் 24:31 |
| 50 | அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். | மத் 24:50 மத் 24:51 லூக் 13:27 லூக் 13:28 வெளிப் 14:10 வெளிப் 14:11 வெளிப் 16:10 வெளிப் 16:11 |
| 51 | பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள். | மத் 13:11 மத் 13:19 மத் 15:17 மத் 16:11 மத் 24:15 மாற் 4:34 மாற் 7:18 மாற் 8:17 மாற் 8:18 லூக் 9:44 லூக் 9:45 அப் 8:30 அப் 8:31 1யோவா 5:20 |
| 52 | அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார். | மத் 23:34 எஸ்றா 7:6 எஸ்றா 7:10 எஸ்றா 7:21 லூக் 11:49 2கொரி 3:4-6 கொலோ 1:7 1தீமோ 3:6 1தீமோ 3:15 1தீமோ 3:16 2தீமோ 3:16 2தீமோ 3:17 தீத் 1:9 தீத் 2:6 தீத் 2:7 |
| 53 | இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, | மாற் 4:33-35 |
| 54 | தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? | மத் 2:23 மாற் 6:1 மாற் 6:2 லூக் 4:16-30 யோவா 1:11 |
| 55 | இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? | சங் 22:6 ஏசா 49:7 ஏசா 53:2 ஏசா 53:3 மாற் 6:3 லூக் 3:23 லூக் 4:22 யோவா 1:45 யோவா 1:46 யோவா 6:42 யோவா 7:41 யோவா 7:42 யோவா 9:29 |
| 56 | இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, |
| 57 | அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். | மத் 11:6 ஏசா 8:14 ஏசா 49:7 ஏசா 53:3 மாற் 6:3 லூக் 2:34 லூக் 2:35 லூக் 7:23 யோவா 6:42 யோவா 6:61 1கொரி 1:23-28 |
| 58 | அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. | மாற் 6:5 மாற் 6:6 லூக் 4:25-29 ரோம 11:20 எபிரெ 3:12-19 எபிரெ 4:6-11 |