இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மத்தேயு 12

                   
புத்தகங்களைக் காட்டு
1அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.மாற் 2:23-28 லூக் 6:1-5
2பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.மத் 12:10 யாத் 20:9-11 யாத் 23:12 யாத் 31:15-17 யாத் 35:2 எண் 15:32-36 ஏசா 58:13 மாற் 3:2-5 லூக் 6:6-11 லூக் 13:10-17 லூக் 23:56 யோவா 5:9-11 யோவா 5:16-11 யோவா 5:17-11 யோவா 7:21-24 யோவா 9:14-16
3அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?மத் 12:5 மத் 19:4 மத் 21:16 மத் 22:31 மாற் 12:10 மாற் 12:26 லூக் 6:3 லூக் 10:26
4அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.யாத் 25:30 லேவி 24:5-9
5அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?எண் 28:9 எண் 28:10 யோவா 7:22 யோவா 7:23
6தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத் 12:41 மத் 12:42 மத் 23:17-21 2நாளா 6:18 ஆகா 2:7-9 மல்கி 3:1 யோவா 2:19-21 எபே 2:20-22 கொலோ 2:9 1பேது 2:4 1பேது 2:5
7பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.மத் 9:13 மத் 22:29 அப் 13:27
8மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.மத் 9:6 மாற் 2:28 மாற் 9:4-7 லூக் 6:5 யோவா 5:17-23 1கொரி 9:21 1கொரி 16:2 வெளிப் 1:10
9அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.மாற் 3:1-5 லூக் 6:6-11
10அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.1இரா 13:4-6 சகரி 11:17 யோவா 5:3
11அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?லூக் 13:15-17 லூக் 14:5
12ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் என்று சொன்னார்.மத் 6:26 லூக் 12:24
13பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.லூக் 13:13 அப் 3:7 அப் 3:8
14அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.மத் 27:1 மாற் 3:6 லூக் 6:11 யோவா 5:18 யோவா 10:39 யோவா 11:53 யோவா 11:57
15இயேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,மத் 10:23 லூக் 6:12 யோவா 7:1 யோவா 10:40-42 யோவா 11:54
16தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.மத் 9:30 மத் 17:9 மாற் 7:36 லூக் 5:14 லூக் 5:15
17ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது:மத் 8:17 மத் 13:35 மத் 21:4 ஏசா 41:22 ஏசா 41:23 ஏசா 42:9 ஏசா 44:26 லூக் 21:22 லூக் 24:44 யோவா 10:35 யோவா 12:38 யோவா 19:28 அப் 13:27
18இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.ஏசா 49:5 ஏசா 49:6 ஏசா 52:13 ஏசா 53:11 சகரி 3:8 பிலிப் 2:6 பிலிப் 2:7
19வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.மத் 11:29 சகரி 9:9 லூக் 17:20 யோவா 18:36-38 2கொரி 10:1 2தீமோ 2:24 2தீமோ 2:25
20அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.மத் 11:28 2இரா 18:21 சங் 51:17 சங் 147:3 ஏசா 40:11 ஏசா 57:15 ஏசா 61:1-3 புலம் 3:31-34 எசே 34:16 லூக் 4:18 2கொரி 2:7 எபிரெ 12:12 எபிரெ 12:13
21அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே.ஏசா 11:10 ரோம 15:12 ரோம 15:13 எபே 1:12 எபே 1:13 கொலோ 1:27
22அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.மத் 9:32 மாற் 3:11 லூக் 11:14
23ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.மத் 9:33 மத் 15:30 மத் 15:31
24பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.மத் 9:34 மாற் 3:22 லூக் 11:15
25இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போகும்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.மத் 9:4 சங் 139:2 எரே 17:10 ஆமோ 4:13 மாற் 2:8 யோவா 2:24 யோவா 2:25 யோவா 21:17 1கொரி 2:11 எபிரெ 4:13 வெளிப் 2:23
26சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத்தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?யோவா 12:31 யோவா 14:30 யோவா 16:11 2கொரி 4:4 கொலோ 1:13 1யோவா 5:19 வெளிப் 9:11 வெளிப் 12:9 வெளிப் 16:10 வெளிப் 20:2 வெளிப் 20:3
27நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.மாற் 9:38 மாற் 9:39 லூக் 9:49 லூக் 9:50 லூக் 11:19 அப் 19:13-16
28நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.மத் 12:18 மாற் 16:17 லூக் 11:20 அப் 10:38
29அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.ஏசா 49:24 ஏசா 53:12 மாற் 3:27 லூக் 11:21 லூக் 11:22 1யோவா 3:8 1யோவா 4:4 வெளிப் 12:7-10 வெளிப் 20:1-3 வெளிப் 20:7-9
30என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.மத் 6:24 யோசு 5:13 யோசு 24:15 1நாளா 12:17 1நாளா 12:18 மாற் 9:40 லூக் 9:50 லூக் 11:23 2கொரி 6:15 2கொரி 6:16 1யோவா 2:19 வெளிப் 3:15 வெளிப் 3:16
31ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.ஏசா 1:18 ஏசா 55:7 எசே 33:11 1தீமோ 1:13-15 எபிரெ 6:4 எபிரெ 10:26 எபிரெ 10:29 1யோவா 1:9 1யோவா 2:1 1யோவா 2:2
32எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.மத் 11:19 மத் 13:55 லூக் 7:34 லூக் 23:34 யோவா 7:12 யோவா 7:52 அப் 3:14 அப் 3:15 அப் 3:19 அப் 26:9-11 1தீமோ 1:13 1தீமோ 1:15
33மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.மத் 23:26 எசே 18:31 ஆமோ 5:15 லூக் 11:39 லூக் 11:40 யாக் 4:8
34விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.மத் 3:7 மத் 23:33 லூக் 3:7 யோவா 8:44 1யோவா 3:10
35நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.மத் 13:52 சங் 37:30 சங் 37:31 நீதி 10:20 நீதி 10:21 நீதி 12:6 நீதி 12:17-19 நீதி 15:4 நீதி 15:23 நீதி 15:28 நீதி 16:21-23 நீதி 25:11 நீதி 25:12 எபே 4:29 கொலோ 3:16 கொலோ 4:6
36மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.பிரச 12:14 ரோம 2:16 எபே 6:4-6 யூதா 1:14 யூதா 1:15 வெளிப் 20:12
37ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.நீதி 13:3
38அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.மத் 16:1-4 மாற் 8:11 மாற் 8:12 லூக் 11:16 லூக் 11:29 யோவா 2:18 யோவா 4:48 1கொரி 1:22
39அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.ஏசா 57:3 மாற் 8:38 யாக் 4:4
40யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.யோனா 1:17
41யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.லூக் 11:32
42தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.1இரா 10:1-13 2நாளா 9:1-12 லூக் 11:31 லூக் 11:32 அப் 8:27 அப் 8:28
43அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:லூக் 11:24 அப் 8:13
44நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு,மத் 12:29 லூக் 11:21 லூக் 11:22 யோவா 13:27 எபே 2:2 1யோவா 4:4
45திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.மத் 12:24 மாற் 5:9 மாற் 16:9 எபே 6:12
46இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.மாற் 2:21 மாற் 3:31-35 லூக் 8:10 லூக் 8:19-21
47அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
48தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,மத் 10:37 உபா 33:9 மாற் 3:32 மாற் 3:33 லூக் 2:49 லூக் 2:52 யோவா 2:3 யோவா 2:4 2கொரி 5:16
49தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!மத் 28:7 மாற் 3:34 யோவா 17:8 யோவா 17:9 யோவா 17:20 யோவா 20:17-20
50பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார்.மத் 7:20 மத் 7:21 மத் 17:5 மாற் 3:35 லூக் 8:21 லூக் 11:27 லூக் 11:28 யோவா 6:29 யோவா 6:40 யோவா 15:14 அப் 3:22 அப் 3:23 அப் 16:30 அப் 16:31 அப் 17:30 அப் 26:20 கலா 5:6 கலா 6:15 கொலோ 3:11 எபிரெ 5:9 யாக் 1:21 யாக் 1:22 1பேது 4:2 1யோவா 2:17 1யோவா 3:23 1யோவா 3:24 வெளிப் 22:14
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.