| 1 | விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும், | 2நாளா 20:4 நெகே 8:1 நெகே 9:1 எஸ்தர் 4:16 யோவே 1:14 யோவே 2:12-18 மத் 18:20 |
| 2 | நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள். | செப் 3:8 2இரா 22:16 2இரா 22:17 2இரா 23:26 2இரா 23:27 எசே 12:25 மத் 24:35 2பேது 3:4-10 |
| 3 | தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள். | சங் 105:4 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 3:13 எரே 3:14 எரே 4:1 எரே 4:2 எரே 29:12 எரே 29:13 ஓசி 7:10 ஓசி 10:12 ஆமோ 5:4-6 ஆமோ 5:14-6 ஆமோ 5:15-6 மத் 7:7 மத் 7:8 |
| 4 | காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். | எரே 25:20 எரே 47:1-7 எசே 25:15-17 ஆமோ 1:6-8 சகரி 9:5-7 |
| 5 | சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன். | எரே 47:7 எசே 25:16 |
| 6 | சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத் தோழங்களுமாகும். | செப் 2:14 செப் 2:15 ஏசா 17:2 எசே 25:5 |
| 7 | அந்த தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார். | ஏசா 14:29-32 ஒபதி 1:19 சகரி 9:6 சகரி 9:7 அப் 8:26 அப் 8:40 |
| 8 | மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச்சொன்ன தூஷணங்களையும் கேட்டேன். | எரே 48:27-29 எசே 25:8-11 |
| 9 | ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீதியானவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். | எண் 14:21 ஏசா 49:18 எரே 46:18 ரோம 14:11 |
| 10 | அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும். | செப் 2:8 ஏசா 16:6 எரே 48:29 தானி 4:37 தானி 5:20-23 ஒபதி 1:3 1பேது 5:5 |
| 11 | கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள். | உபா 32:38 ஓசி 2:17 சகரி 13:2 |
| 12 | எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள். | ஏசா 18:1-7 ஏசா 20:4 ஏசா 20:5 ஏசா 43:3 எரே 46:9 எரே 46:10 எசே 30:4-9 |
| 13 | அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார். | சங் 83:8 சங் 83:9 ஏசா 10:12 ஏசா 10:16 ஏசா 11:11 எசே 31:3-18 |
| 14 | அதின் நடுவில் மந்தைகளும் ஜாதிஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுரு மரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார். | செப் 2:6 ஏசா 13:19-22 ஏசா 34:11-17 வெளிப் 18:2 |
| 15 | நான்தான், என்னைத் தவிர வெறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப் போய்விட்டதே! அதின் வழியாய்ப் போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான். | ஏசா 10:12-14 ஏசா 22:2 ஏசா 47:7 வெளிப் 18:7-10 |