| 1 | இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ! | லேவி 1:16 |
| 2 | அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை. | உபா 28:15-68 நெகே 9:26 எரே 7:23-28 எரே 22:21 சகரி 7:11-14 |
| 3 | அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். | யோபு 4:8-11 சங் 10:8-10 நீதி 28:15 ஏசா 1:23 எரே 22:17 எசே 22:6 எசே 22:25-27 மீகா 3:1-4 மீகா 3:9-11 |
| 4 | அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள். | ஏசா 9:15 ஏசா 56:10-12 எரே 5:31 எரே 6:13 எரே 6:14 எரே 8:10 எரே 14:13-15 எரே 23:9-17 எரே 23:25-27 எரே 23:32 எரே 27:14 எரே 27:15 புலம் 2:14 எசே 13:3-16 ஓசி 9:7 மீகா 2:11 மீகா 3:5 மீகா 3:6 மத் 7:15 2கொரி 11:13 2பேது 2:1-3 1யோவா 4:1 வெளிப் 19:20 |
| 5 | அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான். | உபா 32:4 சங் 99:3 சங் 99:4 சங் 145:17 பிரச 3:16 பிரச 3:17 ஏசா 45:21 ஆபகூ 1:3 சகரி 9:9 ரோம 3:26 1பேது 1:17 |
| 6 | ஜாதிகளைச் சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனுஷர் இல்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின. | ஏசா 10:1-34 ஏசா 15:1-16 ஏசா 19:1-25 ஏசா 37:11-13 ஏசா 37:24-26 ஏசா 37:36-26 எரே 25:9-11 எரே 25:18-26 நாகூ 2:1-3 1கொரி 10:6 1கொரி 10:11 |
| 7 | உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள். | செப் 3:2 ஏசா 5:4 ஏசா 63:8 எரே 8:6 எரே 36:3 லூக் 19:42-44 2பேது 3:9 |
| 8 | ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும். | சங் 27:14 சங் 37:7 சங் 37:34 சங் 62:1 சங் 62:5 சங் 123:2 சங் 130:5 சங் 130:6 நீதி 20:22 ஏசா 30:18 புலம் 3:25 புலம் 3:26 ஓசி 12:6 மீகா 7:7 யாக் 5:7 யாக் 5:8 |
| 9 | அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன். | ஏசா 19:18 மத் 12:35 எபே 4:29 |
| 10 | எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறவர்களாகிய சிதறடிக்கப்பட்டவர்களின் குமாரத்தியானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள். | சங் 68:31 சங் 72:8-11 ஏசா 11:11 ஏசா 18:1 ஏசா 18:7-19 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 49:20-23 ஏசா 60:4-12 ஏசா 66:18-21 மல்கி 1:11 அப் 8:27 அப் 24:17 ரோம 11:11 ரோம 11:12 ரோம 15:16 1பேது 1:1 |
| 11 | எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும், அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய். | செப் 3:19 செப் 3:20 சங் 49:5 ஏசா 45:17 ஏசா 54:4 ஏசா 61:7 ஏசா 65:13 ஏசா 65:14 யோவே 2:26 யோவே 2:27 ரோம 9:33 1பேது 2:6 |
| 12 | உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள். | ஏசா 14:32 ஏசா 61:1-3 சகரி 11:11 சகரி 13:8 சகரி 13:9 மத் 5:3 மத் 11:5 1கொரி 1:27 1கொரி 1:28 யாக் 2:5 |
| 13 | இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள். | செப் 2:7 ஏசா 6:13 ஏசா 10:20-22 மீகா 4:7 ரோம 11:4-7 |
| 14 | சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. | எஸ்றா 3:11-13 நெகே 12:43 சங் 14:7 சங் 47:5-7 சங் 81:1-3 சங் 95:1 சங் 95:2 சங் 100:1 சங் 100:2 சங் 126:2 சங் 126:3 ஏசா 12:6 ஏசா 24:14-16 ஏசா 35:2 ஏசா 40:9 ஏசா 42:10-12 ஏசா 51:11 ஏசா 54:1 ஏசா 65:13 ஏசா 65:14 ஏசா 65:18 ஏசா 65:19 எரே 30:19 எரே 31:13 எரே 33:11 சகரி 2:10 சகரி 2:11 சகரி 9:9 சகரி 9:10 சகரி 9:15-17 மத் 21:9 லூக் 2:10-14 வெளிப் 19:1-6 |
| 15 | கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய். | ஆதி 30:23 சங் 85:3 ஏசா 25:8 ஏசா 40:1 ஏசா 40:2 ஏசா 51:22 மீகா 7:18-20 சகரி 1:14-16 சகரி 8:13-15 சகரி 10:6 சகரி 10:7 |
| 16 | அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். | ஏசா 35:3 ஏசா 35:4 ஏசா 40:9 ஏசா 41:10 ஏசா 41:13 ஏசா 41:14 ஏசா 43:1 ஏசா 43:2 ஏசா 44:2 ஏசா 54:4 எரே 46:27 எரே 46:28 ஆகா 2:4 ஆகா 2:5 சகரி 8:15 யோவா 12:12 எபிரெ 12:12 |
| 17 | உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். | செப் 3:5 செப் 3:15 |
| 18 | உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய்க் கூட்டிக்கொள்ளுவேன். | செப் 3:20 எரே 23:3 எரே 31:8 எரே 31:9 எசே 34:13 எசே 36:24 ஓசி 1:11 ரோம 11:25 ரோம 11:26 |
| 19 | இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச்செய்வேன். | செப் 3:15 ஏசா 25:9-12 ஏசா 26:11 ஏசா 41:11-16 ஏசா 43:14-17 ஏசா 49:25 ஏசா 49:26 ஏசா 51:22 ஏசா 51:23 ஏசா 66:14-16 எரே 30:16 எரே 46:28 எரே 51:35 எரே 51:36 எசே 39:17-22 யோவே 3:2-9 மீகா 7:10 நாகூ 1:11-14 சகரி 2:8 சகரி 2:9 சகரி 12:3 சகரி 12:4 சகரி 14:2 சகரி 14:3 வெளிப் 19:17-21 வெளிப் 20:9 |
| 20 | அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 11:11 ஏசா 11:12 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 56:8 எசே 28:25 எசே 34:16 எசே 37:21 எசே 39:28 ஆமோ 9:14 |