| 1 | ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். | எசே 1:3 ஓசி 1:1 2தீமோ 3:16 2பேது 1:19 |
| 2 | தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | 2இரா 22:16 2இரா 22:17 2நாளா 36:21 ஏசா 6:11 எரே 6:8 எரே 6:9 எரே 24:8-10 எரே 34:22 எரே 36:29 எசே 33:27-29 மீகா 7:13 |
| 3 | மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 4:23-29 எரே 12:4 ஓசி 4:3 |
| 4 | நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூட கெம்மரீம் என்பவர்களின் பேரையும், | யாத் 15:12 2இரா 21:13 ஏசா 14:26 ஏசா 14:27 |
| 5 | வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும், | 2இரா 23:12 எரே 19:13 எரே 32:29 |
| 6 | கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன். | 1சாமு 15:11 சங் 36:3 சங் 125:5 ஏசா 1:4 எரே 2:13 எரே 2:17 எரே 3:10 எரே 15:6 எசே 3:20 ஓசி 4:15 ஓசி 4:16 ஓசி 11:7 எபிரெ 10:38 எபிரெ 10:39 2பேது 2:18-22 |
| 7 | கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். | 1சாமு 2:9 1சாமு 2:10 யோபு 40:4 யோபு 40:5 சங் 46:10 சங் 76:8 சங் 76:9 ஏசா 6:5 ஆமோ 6:10 ஆபகூ 2:20 சகரி 2:13 ரோம 3:19 ரோம 9:20 |
| 8 | கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். | ஏசா 10:12 ஏசா 24:21 |
| 9 | வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன். | 1சாமு 5:5 |
| 10 | அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார். | செப் 1:7 செப் 1:15 எரே 39:2 |
| 11 | மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள். | எரே 4:8 எரே 25:34 எசே 21:12 யோவே 1:5 யோவே 1:13 சகரி 11:2 சகரி 11:3 யாக் 5:1 |
| 12 | அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன். | எரே 16:16 எரே 16:17 ஆமோ 9:1-3 ஒபதி 1:6 |
| 13 | அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை. | செப் 1:9 ஏசா 6:11 ஏசா 24:1-3 எரே 4:7 எரே 4:20 எரே 5:17 எரே 9:11 எரே 9:19 எரே 12:10-13 எசே 7:19 எசே 7:21 எசே 22:31 மீகா 3:12 |
| 14 | கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். | செப் 1:7 எரே 30:7 எசே 30:3 யோவே 2:1 யோவே 2:11 யோவே 2:31 மல்கி 4:5 அப் 2:20 வெளிப் 6:17 |
| 15 | அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். | செப் 1:18 செப் 2:2 ஏசா 22:5 எரே 30:7 ஆமோ 5:18-20 லூக் 21:22 லூக் 21:23 ரோம 2:5 2பேது 3:7 வெளிப் 6:17 |
| 16 | அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். | ஏசா 59:10 எரே 4:19 எரே 4:20 எரே 6:1 எரே 8:16 ஓசி 5:8 ஓசி 8:1 ஆமோ 3:6 ஆபகூ 1:6-10 ஆபகூ 3:6 |
| 17 | மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும். | உபா 28:28 உபா 28:29 சங் 79:3 ஏசா 29:10 ஏசா 59:9 ஏசா 59:10 புலம் 4:14 மத் 15:14 யோவா 9:40 யோவா 9:41 ரோம 11:7 ரோம 11:25 2கொரி 4:4 2பேது 1:9 1யோவா 2:11 வெளிப் 3:17 |
| 18 | கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார். | செப் 1:11 சங் 49:6-9 சங் 52:5-7 நீதி 11:4 நீதி 18:11 ஏசா 2:20 ஏசா 2:21 எரே 9:23 எரே 9:24 எசே 7:19 மத் 16:26 லூக் 12:19-21 லூக் 16:22 லூக் 16:23 |