| 1 | நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப்பார்ப்பேன் என்றேன். | சங் 73:16 சங் 73:17 ஏசா 21:8 ஏசா 21:11 ஏசா 21:12 |
| 2 | அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை. | உபா 27:8 உபா 31:19 உபா 31:22 ஏசா 8:1 ஏசா 30:8 எரே 36:2-4 எரே 36:27-32 தானி 12:4 வெளிப் 1:18 வெளிப் 1:19 வெளிப் 14:13 வெளிப் 19:9 வெளிப் 21:5-8 |
| 3 | குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. | எரே 27:7 தானி 8:19 தானி 9:24-27 தானி 10:1 தானி 10:14 தானி 11:27 தானி 11:35 அப் 1:7 அப் 17:26 கலா 4:2 2தெச 2:6-8 |
| 4 | இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். | யோபு 40:11 யோபு 40:12 தானி 4:30 தானி 4:37 தானி 5:20-23 லூக் 18:14 2தெச 2:4 1பேது 5:5 |
| 5 | அவன் மதுபானத்தினால் அக்கிமஞ்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தரியாமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்துக்குச் சமானமாய்ச் சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சேர்த்து, சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், | நீதி 20:1 நீதி 23:29-33 நீதி 31:4 நீதி 31:5 ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 5:22 ஏசா 5:23 ஏசா 21:5 எரே 51:39 தானி 5:1-4 தானி 5:23-4 நாகூ 1:9 நாகூ 1:10 |
| 6 | இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள். | எண் 23:7 எண் 23:18 ஏசா 14:4-19 எரே 29:22 எரே 50:13 எசே 32:21 மீகா 2:4 |
| 7 | உன்னைக் கடிப்பவர்கள் சடிதியாய் எழும்புவதும், உன்னை அலைக்கழிப்பவர்கள் விழிப்பதுமில்லையோ? நீ அவர்களுக்குச் சூறையாகாயோ? | நீதி 29:1 ஏசா 13:1-5 ஏசா 13:16-18 ஏசா 21:2-9 ஏசா 41:25 ஏசா 45:1-3 ஏசா 46:11 ஏசா 47:11 ஏசா 48:14 ஏசா 48:15 எரே 50:21-32 எரே 51:11 எரே 51:27 எரே 51:28 எரே 51:57 தானி 5:25-31 நாகூ 1:9 நாகூ 1:10 1தெச 5:3 |
| 8 | நீ அநேகம் ஜாதிகளைக் கொள்ளையிட்டபடியினால் ஜனங்களில் மீதியான யாவரும் நீ சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் நீ செய்த கொடுமையினிமித்தமும் உன்னைக் கொள்ளையிடுவார்கள். | ஆபகூ 2:10 ஆபகூ 2:17 ஏசா 33:1 ஏசா 33:4 எரே 27:7 எரே 30:16 எரே 50:10 எரே 50:37 எரே 51:13 எரே 51:44 எரே 51:48 எரே 51:55 எரே 51:56 சகரி 2:8 சகரி 2:9 |
| 9 | தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ! | ஆதி 13:10-13 ஆதி 19:26-38 உபா 7:25 உபா 7:26 யோசு 7:21-26 1இரா 21:2-4 1இரா 21:19-24 2இரா 5:20-27 யோபு 20:19-28 எரே 22:13-19 சகரி 5:1-4 அப் 1:17-25 யூதா 1:11 |
| 10 | அநேக ஜனங்களை வெட்டிப்போட்டதினால் உன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைபண்ணினாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தாய். | 2இரா 9:26 2இரா 10:7 ஏசா 14:20-22 எரே 22:30 எரே 36:31 நாகூ 1:14 மத் 27:25 |
| 11 | கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும். | ஆதி 4:10 யோசு 24:27 யோபு 31:38-40 லூக் 19:40 எபிரெ 12:24 யாக் 5:3 யாக் 5:4 வெளிப் 6:10 |
| 12 | இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ! | ஆதி 4:11-17 யோசு 6:26 1இரா 16:34 எரே 22:13-17 எசே 24:9 தானி 4:27-31 மீகா 3:10 நாகூ 3:1 யோவா 11:47-50 வெளிப் 17:6 |
| 13 | இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ? | ஆதி 11:6-9 2சாமு 15:31 யோபு 5:13 யோபு 5:14 சங் 39:6 சங் 127:1 சங் 127:2 நீதி 21:30 ஏசா 41:5-8 ஏசா 50:11 ஏசா 55:2 எரே 51:58 எரே 51:64 மல்கி 1:4 |
| 14 | சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். | சங் 22:27 சங் 67:1 சங் 67:2 சங் 72:19 சங் 86:9 சங் 98:1-3 ஏசா 6:3 ஏசா 11:9 சகரி 14:8 சகரி 14:9 வெளிப் 11:15 வெளிப் 15:4 |
| 15 | தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ! | ஆதி 19:32-35 2சாமு 11:13 2சாமு 13:26-28 எரே 25:15 எரே 51:7 வெளிப் 17:2 வெளிப் 17:6 வெளிப் 18:3 |
| 16 | நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய். | நீதி 3:35 ஏசா 47:3 ஓசி 4:7 பிலிப் 3:19 |
| 17 | லீபனோனுக்குச் செய்த கொடுமை உன்னை மூடும்; சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் தேசத்திற்கும் பட்டணத்திற்கும் அதின் குடிகள் எல்லாருக்கும் செய்த கொடுமையினிமித்தமும் மிருகங்கள் செய்யும் பாழ்க்கடிப்பு உன்னைக் கலங்கப்பண்ணும். | சகரி 11:1 |
| 18 | சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம்பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்? | ஏசா 37:38 ஏசா 42:17 ஏசா 44:9 ஏசா 44:10 ஏசா 45:16 ஏசா 45:20 ஏசா 46:1 ஏசா 46:2 ஏசா 46:6-8 எரே 2:27 எரே 2:28 எரே 10:3-5 எரே 50:2 ரோம 6:21 |
| 19 | மரத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே? | 1இரா 18:26-29 சங் 97:7 ஏசா 44:17 எரே 51:47 தானி 3:7 தானி 3:18 தானி 3:29 தானி 5:23 யோனா 1:5 |
| 20 | கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது. | சங் 11:4 சங் 115:3 சங் 132:13 சங் 132:14 ஏசா 6:1 ஏசா 66:1 ஏசா 66:6 யோனா 2:4 யோனா 2:7 எபே 2:21 எபே 2:22 |