இணை வசன வேதாகமம்

Click to Subscribe

மீகா 6

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் சொல்லுகிறதைச் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது.மீகா 1:2 1சாமு 15:16 எரே 13:15 ஆமோ 3:1 எபிரெ 3:7 எபிரெ 3:8
2பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.உபா 32:22 2சாமு 22:8 2சாமு 22:16 சங் 104:5 நீதி 8:29 எரே 31:37
3என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல்.மீகா 6:5 சங் 50:7 சங் 81:8 சங் 81:13
4நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.யாத் 12:51 யாத் 14:30 யாத் 14:31 யாத் 20:2 உபா 4:20 உபா 4:34 உபா 5:6 உபா 9:26 நெகே 9:9-11 சங் 78:51-53 சங் 106:7-10 சங் 136:10 சங் 136:11 ஏசா 63:9-12 எரே 32:21 எசே 20:5-9 ஆமோ 2:10 அப் 7:36
5என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனாகிய பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.உபா 8:2 உபா 8:18 உபா 9:7 உபா 16:3 சங் 103:1 சங் 103:2 சங் 111:4 எபே 2:11
6என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒருவயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ?2சாமு 21:3 மத் 19:16 லூக் 10:25 யோவா 6:26 அப் 2:37 அப் 16:30 ரோம 10:2 ரோம 10:3
7ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?1சாமு 15:22 சங் 10:8-13 சங் 50:9 சங் 51:16 ஏசா 1:11-15 ஏசா 40:16 எரே 7:21 எரே 7:22 ஓசி 6:6 ஆமோ 5:22
8மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.ரோம 9:20 1கொரி 7:16 யாக் 2:20
9கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.மீகா 3:12 ஏசா 24:10-12 ஏசா 27:10 ஏசா 32:13 ஏசா 32:14 ஏசா 40:6-8 ஏசா 66:6 எரே 19:11-13 எரே 26:6 எரே 26:18 எரே 37:8-10 ஓசி 13:16 ஆமோ 2:5 ஆமோ 3:8-15 ஆமோ 6:1 யோனா 3:4 செப் 3:2
10துன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ?யோசு 7:1 2இரா 5:23 2இரா 5:24 நீதி 10:2 நீதி 21:6 எரே 5:26 எரே 5:27 ஆமோ 3:10 ஆபகூ 2:5-11 செப் 1:9 சகரி 5:3 சகரி 5:4 யாக் 5:1-4
11கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?ஓசி 12:7
12அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.மீகா 2:1 மீகா 2:2 மீகா 3:1-3 மீகா 3:9-11 மீகா 7:2-6 ஏசா 1:23 ஏசா 5:7 எரே 5:5 எரே 5:6 எரே 5:26-29 எரே 6:6 எரே 6:7 எசே 22:6-13 எசே 22:25-29 ஓசி 4:1 ஓசி 4:2 ஆமோ 5:11 ஆமோ 5:12 ஆமோ 6:1-3 செப் 3:3
13ஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னை பலட்சயமாக்குவேன்.லேவி 26:16 உபா 28:21 உபா 28:22 யோபு 33:19-22 சங் 107:17 சங் 107:18 ஏசா 1:5 ஏசா 1:6 எரே 14:18 அப் 12:23
14நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம்பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.லேவி 26:26 ஏசா 65:13 எசே 4:16 எசே 4:17 ஓசி 4:10 ஆகா 1:6 ஆகா 2:16
15நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையாடினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை.லேவி 26:20 உபா 28:38-40 ஏசா 62:8 ஏசா 62:9 ஏசா 65:21 ஏசா 65:22 எரே 12:13 யோவே 1:10-12 ஆமோ 5:11 செப் 1:13 ஆகா 1:6
16நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.1இரா 16:25-30 ஓசி 5:11
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.