| 1 | நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம். | ஏசா 13:1 ஏசா 14:28 ஏசா 15:1 ஏசா 21:1 ஏசா 22:1 ஏசா 23:1 எரே 23:33-37 சகரி 9:1 |
| 2 | கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர் அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர். | யாத் 20:5 யாத் 34:14 உபா 4:24 யோசு 24:19 ஏசா 42:13 எசே 38:18 எசே 39:25 யோவே 2:18 சகரி 1:14 சகரி 8:2 |
| 3 | கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. | யாத் 34:6 யாத் 34:7 நெகே 9:17 சங் 103:8 சங் 145:8 யோவே 2:13 யோனா 4:2 யாக் 1:19 |
| 4 | அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும். | யோபு 38:11 சங் 104:7 சங் 106:9 சங் 114:3 சங் 114:5 ஏசா 50:2 ஏசா 50:3 ஏசா 51:10 ஆமோ 5:8 மத் 8:26 |
| 5 | அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும். | 2சாமு 22:8 சங் 29:5 சங் 29:6 சங் 68:8 சங் 97:4 சங் 97:5 சங் 114:4 சங் 114:6 ஏசா 2:12-14 எரே 4:24 ஆபகூ 3:10 மத் 27:51 மத் 28:2 வெளிப் 20:11 |
| 6 | அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும். | சங் 2:12 சங் 76:7 சங் 90:11 ஏசா 27:4 எரே 10:10 மல்கி 3:2 வெளிப் 6:17 |
| 7 | கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். | 1நாளா 16:34 எஸ்றா 3:11 சங் 25:8 சங் 100:5 சங் 136:1-26 சங் 145:6-10 எரே 33:11 புலம் 3:25 ரோம 11:22 1யோவா 4:8-10 |
| 8 | ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும். | ஏசா 8:7 ஏசா 8:8 ஏசா 28:17 எசே 13:13 தானி 9:26 தானி 11:10 தானி 11:22 தானி 11:40 ஆமோ 8:8 ஆமோ 9:5 ஆமோ 9:6 மத் 7:27 2பேது 3:6 2பேது 3:7 |
| 9 | நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது. | நாகூ 1:11 சங் 2:1-4 சங் 21:11 சங் 33:10 நீதி 21:30 ஏசா 8:9 ஏசா 8:10 எசே 38:10 எசே 38:11 அப் 4:25-28 2கொரி 10:5 |
| 10 | அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள். | 2சாமு 23:6 2சாமு 23:7 மீகா 7:4 1தெச 5:2 1தெச 5:3 |
| 11 | கர்த்தருக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான். | நாகூ 1:9 2இரா 18:13 2இரா 18:14 2இரா 18:30 2இரா 19:22-25 2நாளா 32:15-19 ஏசா 10:7-15 |
| 12 | கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன். | 2இரா 19:35 2இரா 19:37 ஏசா 10:32-34 ஏசா 14:24-27 ஏசா 17:14 ஏசா 30:28-33 ஏசா 31:8 ஏசா 37:36 |
| 13 | இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன். | ஏசா 9:4 ஏசா 10:27 ஏசா 14:25 எரே 2:20 மீகா 5:5 மீகா 5:6 |
| 14 | உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்து விதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும், நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன். | சங் 71:3 ஏசா 33:13 |
| 15 | இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான். | ஏசா 40:9 ஏசா 40:10 ஏசா 52:7 லூக் 2:10 லூக் 2:14 அப் 10:36 ரோம 10:15 |