இணை வசன வேதாகமம்

Click to Subscribe

லேவியராகமம் 11

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:உபா 14:3-8 எசே 4:14 தானி 1:8 மத் 15:11 மாற் 7:15-19 அப் 10:12 அப் 10:14 ரோம 14:2 ரோம 14:3 ரோம 14:14 ரோம 14:15 1தீமோ 4:4-6 எபிரெ 9:10 எபிரெ 13:9
3மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.சங் 1:1 நீதி 9:6 2கொரி 6:17
4ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
5குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.சங் 104:18 நீதி 30:26
6முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.உபா 14:7
7பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.உபா 14:8 ஏசா 65:4 ஏசா 66:3 ஏசா 66:17 மத் 7:6 லூக் 8:33 லூக் 15:15 2பேது 2:18-22
8இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.லேவி 5:2 ஏசா 52:11 ஓசி 9:3 மத் 15:11 மத் 15:20 மாற் 7:2 மாற் 7:15 மாற் 7:18 அப் 10:10-15 அப் 10:28 அப் 15:29 ரோம 14:14-17 ரோம 14:21-17 1கொரி 8:8 2கொரி 6:17 எபே 5:7 எபே 5:11 கொலோ 2:16 கொலோ 2:21-23 எபிரெ 9:10
9ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.உபா 14:9 உபா 14:10 அப் 20:21 கலா 5:6 யாக் 2:18 1யோவா 5:2-5
10ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.லேவி 7:18 உபா 14:3 சங் 139:21 சங் 139:22 நீதி 13:20 நீதி 29:27 வெளிப் 21:8
11அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
12தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
13பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,உபா 14:12-20 யோபு 28:7 யோபு 38:41 யோபு 39:27-30 எரே 4:13 எரே 4:22 எரே 48:40 புலம் 4:19 ஓசி 8:1 ஆபகூ 1:8 மத் 24:28 ரோம 1:28-32 ரோம 3:13-17 தீத் 3:3
14பருந்தும், சகலவித வல்லூறும்,
15சகலவித காகங்களும்,ஆதி 8:7 1இரா 17:4 1இரா 17:6 நீதி 30:17 லூக் 12:24
16தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,உபா 14:15-18 சங் 102:6 ஏசா 13:21 ஏசா 13:22 ஏசா 34:11-15 யோவா 3:19-21 எபே 2:2 எபே 2:3 எபே 4:18 எபே 4:19 எபே 5:7-11 பிலிப் 3:18 பிலிப் 3:19 1தெச 5:5-7 வெளிப் 18:2
17ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,
18நாரையும், கூழக்கடாவும், குருகும்,
19கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.
20பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.லேவி 11:23 லேவி 11:27 உபா 14:19 2இரா 17:28-41 சங் 17:14 மத் 6:24 பிலிப் 3:18 பிலிப் 3:19 2தீமோ 4:10 1யோவா 2:15-17 யூதா 1:10 யூதா 1:19
21ஆகிலும், பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
22வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.யாத் 10:4 யாத் 10:5 ஏசா 35:3 மத் 3:4 மாற் 1:6 ரோம 14:1 ரோம 15:1 எபிரெ 5:11 எபிரெ 12:12 எபிரெ 12:13
23பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
24அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.லேவி 11:8 லேவி 11:27 லேவி 11:28 லேவி 11:31 லேவி 11:38-40 லேவி 17:15 லேவி 17:16 ஏசா 22:14 1கொரி 15:33 2கொரி 6:17 எபே 2:1-3 எபே 5:11 கொலோ 2:16 கொலோ 2:17 கொலோ 2:20 எபிரெ 9:26 1யோவா 1:7
25அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.லேவி 11:28 லேவி 11:40 லேவி 14:8 லேவி 15:5 லேவி 15:7-11 லேவி 15:13-11 லேவி 16:28 யாத் 19:10 யாத் 19:14 எண் 19:8 எண் 19:10 எண் 19:19 எண் 19:21 எண் 19:22 எண் 31:24 சங் 51:2 சங் 51:7 சகரி 13:1 யோவா 13:8 அப் 22:16 எபிரெ 9:10 எபிரெ 10:22 1பேது 3:21 1யோவா 1:7 வெளிப் 7:14
26விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.
27நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.லேவி 11:20 லேவி 11:23
28அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.லேவி 11:24 லேவி 11:25
29தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,லேவி 11:20 லேவி 11:21 லேவி 11:41 லேவி 11:42 சங் 10:3 சங் 17:13 சங் 17:14 ஆகா 2:6 லூக் 12:15 லூக் 16:14 யோவா 6:26 யோவா 6:66 எபே 4:14 பிலிப் 3:19 கொலோ 3:5 2தீமோ 3:2-5 எபிரெ 13:5
30உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
31சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.லேவி 11:8 லேவி 11:24 லேவி 11:25
32அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.லேவி 6:28 லேவி 15:12 தீத் 2:14 தீத் 3:5
33அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.லேவி 11:35 லேவி 14:45 எரே 48:38 2கொரி 5:1-8 பிலிப் 3:21
34புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.நீதி 15:8 நீதி 21:4 நீதி 21:27 நீதி 28:8 தீத் 1:15
35அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.லேவி 11:33 லேவி 6:28 லேவி 15:12 2கொரி 5:1-7
36ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும், சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.சகரி 13:1 யோவா 4:14
37மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.1கொரி 15:37 1பேது 1:23 1யோவா 3:9 1யோவா 5:18
38அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
39உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.லேவி 11:24 லேவி 11:28 லேவி 11:31 லேவி 11:40 லேவி 15:5 லேவி 15:7 எண் 19:11 எண் 19:16
40அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப்போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.லேவி 11:25 லேவி 17:15 லேவி 17:16 லேவி 22:8 யாத் 22:31 உபா 14:21 ஏசா 1:16 எசே 4:14 எசே 36:25 எசே 44:31 சகரி 13:1 1கொரி 6:11 1கொரி 10:21 1யோவா 1:7
41தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.லேவி 11:20 லேவி 11:23 லேவி 11:29
42தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும் அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.ஆதி 3:14 ஆதி 3:15 ஏசா 65:25 மீகா 7:17 மத் 3:7 மத் 23:23 யோவா 8:44 2கொரி 11:3 2கொரி 11:13 தீத் 1:12
43ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.லேவி 11:41 லேவி 11:42 லேவி 20:25
44நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.யாத் 20:2
45நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.யாத் 6:7 சங் 105:43-45
46சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம் பண்ணும்பொருட்டு,லேவி 7:37 லேவி 14:54 லேவி 15:32 எசே 43:12
47மிருகத்துக்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.லேவி 10:10 எசே 44:23 மல்கி 3:18 ரோம 14:2 ரோம 14:3 ரோம 14:13-23
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.