| 1 | பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள். | லேவி 16:1 லேவி 22:9 யாத் 6:23 யாத் 24:1 யாத் 24:9 யாத் 28:1 எண் 3:3 எண் 3:4 எண் 26:61 |
| 2 | அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள். | லேவி 9:24 லேவி 16:1 எண் 3:3 எண் 3:4 எண் 16:35 எண் 26:61 2சாமு 6:7 2இரா 1:10 2இரா 1:12 1நாளா 24:2 |
| 3 | அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான். | லேவி 8:35 லேவி 21:6 லேவி 21:8 லேவி 21:15 லேவி 21:17 லேவி 21:21 லேவி 22:9 யாத் 14:4 யாத் 19:22 யாத் 29:43 யாத் 29:44 எண் 20:12 உபா 32:51 1சாமு 6:20 1நாளா 15:12 1நாளா 15:13 சங் 89:7 சங் 119:120 ஏசா 52:11 எசே 20:41 எசே 42:13 எபிரெ 12:28 எபிரெ 12:29 |
| 4 | பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான். | யாத் 6:18 யாத் 6:22 எண் 3:19 எண் 3:30 1நாளா 6:2 |
| 5 | மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள். |
| 6 | மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக. | லேவி 13:45 லேவி 21:1-15 யாத் 33:5 எண் 5:18 எண் 6:6 எண் 6:7 எண் 14:6 உபா 33:9 எரே 7:29 எசே 24:16 எசே 24:17 மீகா 1:16 |
| 7 | நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக்கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள். | லேவி 21:12 மத் 8:21 மத் 8:22 லூக் 9:60 |
| 8 | கர்த்தர் ஆரோனை நோக்கி: |
| 9 | நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம். | எண் 6:3 எண் 6:20 நீதி 31:4 நீதி 31:5 ஏசா 28:7 எரே 35:5 எரே 35:6 எசே 44:21 லூக் 1:15 எபே 5:18 1தீமோ 3:3 1தீமோ 3:8 1தீமோ 5:23 தீத் 1:7 |
| 10 | பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம் பண்ணும்படிக்கும், | லேவி 11:47 லேவி 20:25 லேவி 20:26 எரே 15:19 எசே 22:26 எசே 44:23 தீத் 1:15 1பேது 1:14-16 |
| 11 | கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். | உபா 24:8 உபா 33:10 2நாளா 17:9 2நாளா 30:22 நெகே 8:2 நெகே 8:8 நெகே 9:13 நெகே 9:14 எரே 2:8 எரே 18:18 மல்கி 2:7 மத் 28:20 அப் 20:27 1தெச 4:2 |
| 12 | மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது. | லேவி 2:1-16 லேவி 6:15-18 லேவி 7:9 லேவி 21:22 யாத் 29:2 எண் 18:9 எண் 18:10 எசே 44:29 |
| 13 | அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக்கட்டளை பெற்றிருக்கிறேன். | எண் 18:10 |
| 14 | அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. | லேவி 7:29-34 லேவி 9:21 யாத் 29:24-28 எண் 18:11 யோவா 4:34 |
| 15 | கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான். | லேவி 7:29 லேவி 7:30 லேவி 7:34 |
| 16 | பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு: | லேவி 6:26 லேவி 6:30 லேவி 9:3 லேவி 9:15 |
| 17 | பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்கு கொடுத்தாரே. | லேவி 6:26 லேவி 6:29 லேவி 7:6 லேவி 7:7 |
| 18 | அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப்பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான். | லேவி 6:30 |
| 19 | அப்பொழுது ஆரோன் மோசையை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான். | லேவி 9:8 லேவி 9:12 எபிரெ 7:27 எபிரெ 9:8 |
| 20 | மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான். | 2நாளா 30:18-20 சகரி 7:8 சகரி 7:9 மத் 12:3-7 மத் 12:20-7 |