இணை வசன வேதாகமம்

Click to Subscribe

லேவியராகமம் 12

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.ஆதி 1:28 ஆதி 3:16 யோபு 14:4 யோபு 15:14 யோபு 25:4 சங் 51:5 லூக் 2:22 ரோம 5:12-19
3எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படக்கடவது.ஆதி 17:11 ஆதி 17:12 உபா 30:6 லூக் 1:59 லூக் 2:21 யோவா 7:22 யோவா 7:23 ரோம 3:19 ரோம 4:11 ரோம 4:12 கலா 3:17 கலா 5:3 பிலிப் 3:5 கொலோ 2:11
4பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது.லேவி 15:25-28 ஆகா 2:13 லூக் 2:22 லூக் 2:23
5பெண்பிள்ளயைப் பெற்றாளாகில், அவள், இரண்டு வாரம் சூதகஸ்திரீயைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறுநாள் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவள்.லேவி 12:2 லேவி 12:4 ஆதி 3:13 1தீமோ 2:14 1தீமோ 2:15
6அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒருவயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்கதகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.லேவி 1:10-13 லேவி 5:6-10 லேவி 14:22 லேவி 15:14 லேவி 15:29 எண் 6:10 லூக் 2:22 யோவா 1:29 2கொரி 5:21 எபிரெ 7:26 1பேது 1:18 1பேது 1:19
7அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச்சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.லேவி 1:4 லேவி 4:20 லேவி 4:26 லேவி 4:31 லேவி 4:35 யோபு 1:5 யோபு 14:4 ரோம 3:23 ரோம 3:26 1கொரி 7:14 எபிரெ 9:12-14
8ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.லேவி 1:14 லேவி 5:7 லேவி 14:22 லேவி 15:14 லேவி 15:29 லூக் 2:22 லூக் 2:24 2கொரி 8:9
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.