| 1 | இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய். | ஓசி 10:5 ஏசா 17:11 ஏசா 22:12 புலம் 4:21 எசே 21:10 ஆமோ 6:6 ஆமோ 6:7 ஆமோ 6:13 ஆமோ 8:10 யாக் 4:16 யாக் 5:1 |
| 2 | தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை; அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும். | ஓசி 2:9 ஓசி 2:12 ஏசா 24:7-12 யோவே 1:3-7 யோவே 1:9-13 ஆமோ 4:6-9 ஆமோ 4:5-11 மீகா 6:13-16 ஆகா 1:9 ஆகா 2:16 |
| 3 | அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள். | லேவி 18:28 லேவி 20:22 உபா 4:26 உபா 28:63 யோசு 23:15 1இரா 9:7 மீகா 2:10 |
| 4 | அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை. | ஓசி 3:4 யோவே 1:13 யோவே 2:14 |
| 5 | ஆசரிப்பு நாளிலும், கர்த்தருடைய பண்டிகைநாளிலும் என்ன செய்வீர்கள்? | ஏசா 10:3 எரே 5:31 |
| 6 | இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும். | உபா 28:63 உபா 28:64 1சாமு 13:6 2இரா 13:7 |
| 7 | விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள். | ஏசா 10:3 எரே 10:15 எரே 11:23 எரே 46:21 எசே 7:2-7 எசே 12:22-28 ஆமோ 8:2 மீகா 7:4 செப் 1:14-18 லூக் 21:22 வெளிப் 16:19 |
| 8 | எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான். | உன்ன 3:3 ஏசா 62:6 எரே 6:17 எரே 31:6 எசே 3:17 எசே 33:7 மீகா 7:4 எபிரெ 13:17 |
| 9 | கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார். | ஏசா 24:5 ஏசா 31:6 |
| 10 | வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல் தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். | ஓசி 11:1 யாத் 19:4-6 உபா 32:10 எரே 2:2 எரே 2:3 எரே 31:2 |
| 11 | எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை. | ஆதி 41:52 ஆதி 48:16-20 ஆதி 49:22 உபா 33:17 யோபு 18:5 யோபு 18:18 யோபு 18:19 |
| 12 | அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ! | ஓசி 9:13 ஓசி 9:16 உபா 28:32 உபா 28:41 உபா 28:42 உபா 32:25 யோபு 27:14 எரே 15:7 எரே 16:3 எரே 16:4 புலம் 2:20 |
| 13 | நான் எப்பிராயீமைத் தீருவின் திசைமட்டும் இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான ஸ்தலத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர் தங்கள் குமாரரைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள். | எசே 26:1-28 |
| 14 | கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பாலற்ற முலைகளையும் கொடும். | ஓசி 9:13 ஓசி 9:16 மத் 24:19 மாற் 13:17 லூக் 21:23 லூக் 23:29 1கொரி 7:26 |
| 15 | அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள். | ஓசி 4:15 ஓசி 12:11 யோசு 4:19-24 யோசு 5:2-9 யோசு 10:43 1சாமு 7:16 ஆமோ 4:4 ஆமோ 5:5 மீகா 6:5 |
| 16 | எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம் பண்ணுவேன். | ஓசி 9:11-13 யோபு 18:16 ஏசா 5:24 ஏசா 40:24 மல்கி 4:1 |
| 17 | அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய ஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிவார்கள். | 2நாளா 18:13 நெகே 5:19 சங் 31:14 ஏசா 7:13 மீகா 7:7 யோவா 20:17 யோவா 20:28 பிலிப் 4:19 |