| 1 | இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள். | ஏசா 5:1-7 எசே 15:1-5 நாகூ 2:2 யோவா 15:1-6 |
| 2 | அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நாசமாக்குவார். | ஓசி 7:8 1இரா 18:21 ஏசா 44:18 செப் 1:5 மத் 6:24 லூக் 16:13 2தெச 2:11 2தெச 2:12 யாக் 1:8 யாக் 4:4 1யோவா 2:15 வெளிப் 3:15 வெளிப் 3:16 |
| 3 | நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள். | ஓசி 10:7 ஓசி 10:15 ஓசி 3:4 ஓசி 11:5 ஓசி 13:11 ஆதி 49:10 மீகா 4:9 யோவா 19:15 |
| 4 | பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும். | ஓசி 6:7 2இரா 17:3 2இரா 17:4 எசே 17:13-19 ரோம 1:31 2தீமோ 3:3 |
| 5 | சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள். | ஓசி 8:5 ஓசி 8:6 ஓசி 13:2 1இரா 12:28-32 2இரா 10:29 2இரா 17:16 2நாளா 11:15 2நாளா 13:8 |
| 6 | அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல் தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான். | ஓசி 8:6 ஏசா 46:1 ஏசா 46:2 எரே 43:12 எரே 43:13 தானி 11:8 |
| 7 | சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான். | 1இரா 21:1 2இரா 1:3 |
| 8 | இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள். | ஓசி 10:5 ஓசி 4:15 ஓசி 5:8 |
| 9 | இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள் முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள். | ஓசி 9:9 நியா 19:22-30 நியா 20:5 நியா 20:13 நியா 20:14 |
| 10 | நான் அவர்களை தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள். | உபா 28:63 ஏசா 1:24 எரே 15:6 எசே 5:13 எசே 16:42 |
| 11 | எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான். | ஓசி 4:16 எரே 50:11 |
| 12 | நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. | ஓசி 8:7 சங் 126:5 சங் 126:6 நீதி 11:18 நீதி 18:21 பிரச 11:6 ஏசா 32:20 யாக் 3:18 |
| 13 | அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள். | ஓசி 8:7 யோபு 4:8 நீதி 22:8 கலா 6:7 கலா 6:8 |
| 14 | ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும். | ஓசி 13:16 ஏசா 22:1-4 ஏசா 33:14 ஆமோ 3:8 ஆமோ 9:5 |
| 15 | உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான். | ஓசி 10:5 ஆமோ 7:9-17 |