| 1 | உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான். | ஓசி 5:8 ஏசா 18:3 ஏசா 58:1 எரே 4:5 எரே 6:1 எரே 51:27 எசே 7:14 எசே 33:3-6 யோவே 2:1 யோவே 2:15 ஆமோ 3:6 செப் 1:16 சகரி 9:14 1கொரி 15:52 |
| 2 | எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள். | ஓசி 5:15 ஓசி 7:13 ஓசி 7:14 2இரா 10:16 2இரா 10:29 சங் 78:34-37 ஏசா 48:1 ஏசா 48:2 எரே 7:4 மீகா 3:11 மத் 7:21 மத் 25:11 லூக் 13:25 தீத் 1:16 1யோவா 2:4 |
| 3 | ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான். | சங் 36:3 சங் 81:10 சங் 81:11 ஆமோ 1:11 1தீமோ 5:12 |
| 4 | அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள். | 1இரா 12:16-20 2இரா 15:10-30 மத் 25:12 லூக் 13:25 லூக் 13:27 யோவா 10:14 கலா 4:9 |
| 5 | சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்? | ஓசி 8:6 ஓசி 10:5 ஏசா 45:20 அப் 7:41 |
| 6 | அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப்போகும். | சங் 106:19 சங் 106:20 |
| 7 | அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள். | ஓசி 10:12 யோபு 4:8 நீதி 22:8 பிரச 5:16 கலா 6:7 |
| 8 | இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள். | 2இரா 17:1-6 2இரா 18:11 எரே 50:17 எரே 51:34 புலம் 2:2 புலம் 2:5 புலம் 2:16 எசே 36:3 |
| 9 | அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக் கழுதையைப்போல் அசீரியரண்டைக்குப் போனார்கள்; எப்பிராயீமர் நேசரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டார்கள். | ஓசி 5:13 ஓசி 7:11 2இரா 15:19 எசே 23:5-9 |
| 10 | அவர்கள் புறஜாதியாரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்துக்குள்ளே அகப்படுவார்கள். | ஓசி 10:10 எசே 16:37 எசே 23:9 எசே 23:10 எசே 23:22-26 எசே 23:46-26 எசே 23:47-26 |
| 11 | எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும். | ஓசி 10:1 ஓசி 10:2 ஓசி 10:8 ஓசி 12:11 ஏசா 10:10 ஏசா 10:11 |
| 12 | என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். | உபா 4:6-8 நெகே 9:13 நெகே 9:14 சங் 119:18 சங் 147:19 சங் 147:20 நீதி 22:20 எசே 20:11 ரோம 3:1 ரோம 7:12 |
| 13 | எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள். | எரே 7:21-23 |
| 14 | இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும். | ஓசி 13:6 உபா 32:18 சங் 106:21 ஏசா 17:10 எரே 2:32 எரே 3:21 எரே 23:27 |