| 1 | எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான். | 1சாமு 15:17 நீதி 18:12 ஏசா 66:2 லூக் 14:11 |
| 2 | இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள். | எண் 32:14 2நாளா 28:13 2நாளா 33:23 ஏசா 1:5 ஏசா 30:1 ரோம 2:5 2தீமோ 3:13 |
| 3 | ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள். | ஓசி 6:4 |
| 4 | நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை. | ஓசி 12:9 யாத் 20:2 சங் 81:9 சங் 81:10 ஏசா 43:3 ஏசா 43:10 ஏசா 44:6-8 |
| 5 | நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன். | யாத் 2:25 சங் 1:6 சங் 31:7 சங் 142:3 நாகூ 1:7 1கொரி 8:3 கலா 4:9 |
| 6 | தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள். | ஓசி 10:1 உபா 8:12-14 உபா 32:13-15 நெகே 9:25 நெகே 9:26 நெகே 9:35 எரே 2:31 |
| 7 | ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன். | ஓசி 5:14 ஏசா 42:13 எரே 5:6 புலம் 3:10 ஆமோ 1:2 ஆமோ 3:4 ஆமோ 3:8 |
| 8 | குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல் பட்சித்துப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும். | 2சாமு 17:8 நீதி 17:12 ஆமோ 9:1-3 |
| 9 | இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு. | ஓசி 14:1 2இரா 17:7-17 நீதி 6:32 நீதி 8:36 ஏசா 3:9 ஏசா 3:11 எரே 2:17 எரே 2:19 எரே 4:18 எரே 5:25 மல்கி 1:9 |
| 10 | எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே? | சங் 10:16 சங் 44:4 சங் 47:6 சங் 47:7 சங் 74:12 சங் 89:18 சங் 149:2 ஏசா 33:22 ஏசா 43:15 எரே 8:19 சகரி 14:9 யோவா 1:49 |
| 11 | நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன். | ஓசி 10:3 1சாமு 8:7-9 1சாமு 10:19 1சாமு 12:13 1சாமு 15:22 1சாமு 15:23 1சாமு 16:1 1சாமு 31:1-7 1இரா 12:15 1இரா 12:16 1இரா 12:26-32 1இரா 14:7-16 2இரா 17:1-4 நீதி 28:2 |
| 12 | எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. | உபா 32:34 உபா 32:35 யோபு 14:17 யோபு 21:19 ரோம 2:5 |
| 13 | பிரசவஸ்திரீயின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பேறுகாலமட்டும் அவன் நிற்கவில்லை. | சங் 48:6 ஏசா 13:8 ஏசா 21:3 எரே 4:31 எரே 13:21 எரே 22:23 எரே 30:6 எரே 49:24 மீகா 4:9 மீகா 4:10 1தெச 5:3 |
| 14 | அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும். | ஓசி 6:2 யோபு 19:25-27 யோபு 33:24 சங் 16:10 சங் 30:3 சங் 49:15 சங் 71:20 சங் 86:13 ஏசா 25:8 எசே 37:11-14 ரோம 11:15 |
| 15 | இவன் சகோதரருக்குள்ளே ஜனம் பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும். | ஆதி 41:52 ஆதி 48:19 ஆதி 49:22 உபா 33:17 |
| 16 | சாமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள். | 2இரா 17:6 2இரா 17:18 2இரா 19:9-11 ஏசா 7:8 ஏசா 7:9 ஏசா 8:4 ஏசா 17:3 ஆமோ 3:9-15 ஆமோ 4:1 ஆமோ 6:1-8 ஆமோ 9:1 மீகா 1:4 மீகா 6:16 |