1இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.ஓசி 6:1 ஓசி 12:6 1சாமு 7:3 1சாமு 7:4 2நாளா 30:6-9 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 3:12-14 எரே 4:1 யோவே 2:12 யோவே 2:13 சகரி 1:3 சகரி 1:4 அப் 26:18-20 2வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.யோபு 34:31 யோபு 34:32 யோவே 2:17 மத் 6:9-13 லூக் 11:2-4 லூக் 18:13 3அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.ஓசி 5:13 ஓசி 7:11 ஓசி 8:9 ஓசி 12:1 2நாளா 16:7 சங் 146:3 எரே 31:18-22 4நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று.ஓசி 11:7 யாத் 15:26 ஏசா 57:18 எரே 3:22 எரே 5:6 எரே 8:22 எரே 14:7 எரே 17:14 எரே 33:6 மத் 9:12 மத் 9:13 5நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.உபா 32:2 2சாமு 23:4 யோபு 29:19 சங் 72:6 நீதி 19:12 ஏசா 18:4 ஏசா 26:19 ஏசா 44:3 மீகா 5:7 6அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.சங் 80:9-11 எசே 17:5-8 எசே 31:3-10 தானி 4:10-15 மத் 13:31 யோவா 15:1 ரோம 11:16-24 7அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.சங் 91:1 உன்ன 2:3 ஏசா 32:1 ஏசா 32:2 8இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம் போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்.ஓசி 14:2 ஓசி 14:3 யோபு 34:32 அப் 19:18-20 1தெச 1:9 1பேது 1:14-16 1பேது 4:3 1பேது 4:4 9இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.சங் 107:43 நீதி 1:5 நீதி 1:6 நீதி 4:18 எரே 9:12 தானி 12:10 மத் 13:11 மத் 13:12 யோவா 8:47 யோவா 18:37