| 1 | நீதிமான் மடிந்து போகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. | 2நாளா 32:33 2நாளா 35:24 |
| 2 | நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள். | யோபு 3:17 பிரச 12:7 மத் 25:21 லூக் 16:22 2கொரி 5:1 2கொரி 5:8 பிலிப் 1:23 வெளிப் 14:13 |
| 3 | நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள். | ஏசா 45:20 யோவே 3:9-11 |
| 4 | நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ? | ஏசா 10:15 ஏசா 37:23 ஏசா 37:29 யாத் 9:17 யாத் 16:7 யாத் 16:8 எண் 16:11 லூக் 10:16 அப் 9:4 |
| 5 | நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள். | யாத் 32:6 எண் 25:1 எண் 25:2 எண் 25:6 எரே 50:38 எரே 51:7 ஓசி 4:11-13 ஓசி 7:4-7 ஆமோ 2:7 ஆமோ 2:8 வெளிப் 17:1-5 வெளிப் 18:3 |
| 6 | பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ? | எரே 3:9 ஆபகூ 2:19 |
| 7 | நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். | எரே 2:20 எரே 3:2 எசே 16:16 எசே 16:25 எசே 20:28 எசே 20:29 எசே 23:17 எசே 23:41 |
| 8 | கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய். | எசே 8:8-12 எசே 23:14 எசே 23:41 |
| 9 | நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் போகிறாய்; உன் பரிமளங்களை மிகுதியாக்கி, உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி, உன்னைப் பாதாளமட்டும் தாழ்த்துகிறாய். | ஏசா 30:1-6 ஏசா 31:1-3 2இரா 16:7-11 எசே 16:33 எசே 23:16 ஓசி 7:11 ஓசி 12:1 |
| 10 | வழிதூரமானதால் உழன்றுபோகிறாய்; அது விருதாவென்று நீ சொல்லுகிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ ஆயாசப்படவில்லை. | ஏசா 47:13 எரே 2:36 எரே 9:5 எசே 24:12 ஆபகூ 2:13 |
| 11 | நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய். | ஏசா 51:12 ஏசா 51:13 நீதி 29:25 மத் 26:69-75 கலா 2:12 கலா 2:13 |
| 12 | உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது. | ஏசா 1:11-15 ஏசா 58:2-6 ஏசா 59:6-8 ஏசா 64:5 ஏசா 66:3 ஏசா 66:4 எரே 7:4-11 மீகா 3:2-4 மத் 23:5 மத் 23:14 ரோம 3:10-20 ரோம 10:2 ரோம 10:3 |
| 13 | நீ கூப்பிடும்போது, உன் கணங்கள் உன்னைத் தப்புவிக்கட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, என் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான். | ஏசா 57:9 ஏசா 57:10 நியா 10:14 2இரா 3:13 எரே 22:22 சகரி 7:13 |
| 14 | வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும். | ஏசா 35:8 ஏசா 40:3 ஏசா 62:10 லூக் 3:5 லூக் 3:6 |
| 15 | நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன். | ஏசா 6:1 சங் 83:18 சங் 97:9 சங் 138:6 தானி 4:17 தானி 4:24 தானி 4:25 தானி 4:34 |
| 16 | நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே. | சங் 78:38 சங் 78:39 சங் 85:5 சங் 103:9-16 எரே 10:24 மீகா 7:18 |
| 17 | நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே. | ஏசா 5:8 ஏசா 5:9 ஏசா 56:11 எரே 6:13 எரே 8:10 எரே 22:17 எசே 33:31 மீகா 2:2 மீகா 2:3 லூக் 12:15 எபே 5:3-5 கொலோ 3:5 1தீமோ 6:9 2பேது 2:3 2பேது 2:14 |
| 18 | அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். | ஏசா 1:18 ஏசா 43:24 ஏசா 43:25 ஏசா 48:8-11 எரே 31:18-20 எசே 16:60-63 எசே 36:22-38 லூக் 15:20 ரோம 5:20 |
| 19 | தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | யாத் 4:11 யாத் 4:12 ஓசி 14:2 லூக் 21:15 எபே 6:19 கொலோ 4:3 கொலோ 4:4 எபிரெ 13:15 |
| 20 | துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. | ஏசா 3:11 யோபு 15:20-24 யோபு 18:5-14 யோபு 20:11-29 சங் 73:18-20 நீதி 4:16 நீதி 4:17 யூதா 1:12 |
| 21 | துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார். | ஏசா 3:11 ஏசா 48:22 2இரா 9:22 ரோம 3:16 ரோம 3:17 |