| 1 | கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. | ஏசா 1:16-19 ஏசா 26:7 ஏசா 26:8 ஏசா 55:7 சங் 24:4-6 சங் 50:23 எரே 7:3-11 மல்கி 4:4 மத் 3:2 யோவா 7:17 |
| 2 | இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். | சங் 1:1-3 சங் 15:1-5 சங் 106:3 சங் 112:1 சங் 119:1-5 சங் 128:1 லூக் 11:28 லூக் 12:43 யோவா 13:17 வெளிப் 22:14 |
| 3 | கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக. | எண் 18:4 எண் 18:7 உபா 23:1-3 சகரி 8:20-23 மத் 8:10 மத் 8:11 அப் 8:27 அப் 10:1 அப் 10:2 அப் 10:34 அப் 13:47 அப் 13:48 அப் 17:4 அப் 18:7 ரோம 2:10 ரோம 2:11 ரோம 15:9-12 ரோம 15:16-12 எபே 2:12 எபே 2:22 1பேது 1:1 |
| 4 | என் ஓய்வு நாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: | யோசு 24:15 சங் 119:111 லூக் 10:42 |
| 5 | நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். | மத் 16:18 எபே 2:22 1தீமோ 3:15 எபிரெ 3:6 |
| 6 | கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும், | ஏசா 56:3 ஏசா 44:5 எரே 50:5 அப் 2:41 அப் 11:23 2கொரி 8:5 1தெச 1:9 1தெச 1:10 |
| 7 | நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். | ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 66:19 ஏசா 66:20 சங் 2:6 மீகா 4:1 மீகா 4:2 சகரி 8:3 மல்கி 1:11 யோவா 12:20-26 எபே 2:11-13 எபிரெ 12:22 1பேது 1:1 1பேது 1:2 |
| 8 | இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார். | ஏசா 11:11 ஏசா 11:12 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 54:7 சங் 106:47 சங் 107:2 சங் 107:3 சங் 147:2 எரே 30:17 எரே 31:10 ஓசி 1:11 மீகா 4:6 செப் 3:18-20 சகரி 10:8-10 |
| 9 | வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள். | உபா 28:26 எரே 12:9 எசே 29:5 எசே 39:17 வெளிப் 19:17 வெளிப் 19:18 |
| 10 | அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்; | ஏசா 52:8 எசே 3:17 |
| 11 | திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான். | 1சாமு 2:12-17 1சாமு 2:29-17 எசே 13:19 எசே 34:2 எசே 34:3 மீகா 3:5 மீகா 3:11 மல்கி 1:10 அப் 20:29 அப் 20:33 பிலிப் 3:2 பிலிப் 3:19 1தீமோ 3:3 1தீமோ 3:8 தீத் 1:7 தீத் 1:11 1பேது 5:2 2பேது 2:3 2பேது 2:14 2பேது 2:15 யூதா 1:11 யூதா 1:16 வெளிப் 22:15 |
| 12 | வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள். | ஏசா 5:22 ஏசா 28:7 ஏசா 28:8 நீதி 31:4 நீதி 31:5 ஓசி 4:11 ஆமோ 6:3-6 மத் 24:49-51 லூக் 12:45 லூக் 12:46 லூக் 21:34 தீத் 1:7 |