| 1 | ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். | ரூத் 4:1 நீதி 1:21-23 நீதி 8:4 சகரி 2:6 |
| 2 | நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். | ஏசா 44:20 எரே 2:13 ஓசி 8:7 ஓசி 12:1 ஆபகூ 2:13 மத் 15:9 லூக் 15:15 லூக் 15:16 ரோம 9:31 ரோம 10:2 ரோம 10:3 பிலிப் 3:4-7 எபிரெ 13:9 |
| 3 | உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். | சங் 78:1 சங் 119:112 நீதி 4:20 |
| 4 | இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். | யோவா 3:16 யோவா 18:37 1தீமோ 6:13 வெளிப் 1:5 வெளிப் 3:14 |
| 5 | இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்; | ஏசா 11:10 ஏசா 11:11 ஏசா 52:15 ஏசா 56:8 ஆதி 49:10 சங் 18:43 ரோம 15:20 எபே 2:11 எபே 3:5 |
| 6 | கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். | ஏசா 45:19 1நாளா 28:9 2நாளா 19:3 யோபு 8:5 சங் 14:2 சங் 27:8 சங் 32:6 சங் 95:7 எரே 29:12-14 ஆமோ 5:6 மத் 5:25 மத் 7:7 மத் 7:8 மத் 25:11 மத் 25:12 லூக் 13:25 யோவா 7:33 யோவா 7:34 யோவா 8:21 யோவா 12:35 யோவா 12:36 2கொரி 6:1 2கொரி 6:2 எபிரெ 2:3 எபிரெ 3:13 |
| 7 | துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். | ஏசா 1:16-18 2நாளா 7:14 நீதி 28:13 எரே 3:3 எரே 8:4-6 எசே 3:18 எசே 3:19 எசே 18:21-23 எசே 18:27-32 எசே 33:11 எசே 33:14-16 ஓசி 14:1 ஓசி 14:2 யோனா 3:10 மத் 9:13 லூக் 15:10 லூக் 15:24 அப் 3:19 அப் 26:20 1கொரி 6:9-11 யாக் 4:8-10 |
| 8 | என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். | 2சாமு 7:19 சங் 25:10 சங் 40:5 சங் 92:5 நீதி 21:8 நீதி 25:3 எரே 3:1 எசே 18:29 தானி 4:37 ஓசி 14:9 |
| 9 | பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. | சங் 36:5 சங் 77:19 சங் 89:2 சங் 103:11 மத் 11:25 ரோம 11:31-36 |
| 10 | மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, | ஏசா 5:6 ஏசா 30:23 ஏசா 61:11 உபா 32:2 1சாமு 23:4 சங் 65:9-13 சங் 72:6 சங் 72:7 எசே 34:26 ஓசி 10:12 வெளிப் 11:6 |
| 11 | அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். | ஏசா 54:9 உபா 32:2 மத் 24:35 லூக் 8:11-16 யோவா 6:63 ரோம 10:17 1கொரி 1:18 1கொரி 3:6-9 1தெச 2:13 எபிரெ 6:7 யாக் 1:18 1பேது 1:23 |
| 12 | நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும். | ஏசா 35:10 ஏசா 48:20 ஏசா 49:9 ஏசா 49:10 ஏசா 51:11 ஏசா 65:13 ஏசா 65:14 சங் 105:43 எரே 30:19 எரே 31:12-14 எரே 33:6 எரே 33:11 சகரி 2:7-10 ரோம 5:1 ரோம 5:11 ரோம 15:13 கலா 5:22 கொலோ 1:11 |
| 13 | முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும். | ஏசா 11:6-9 ஏசா 41:19 ஏசா 60:13 ஏசா 60:21 ஏசா 61:3 மீகா 7:4 ரோம 6:19 1கொரி 6:9-11 2கொரி 5:17 |