இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 53

                   
புத்தகங்களைக் காட்டு
1எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?யோவா 1:7 யோவா 1:12 யோவா 12:38 ரோம 10:16 ரோம 10:17
2இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.ஏசா 11:1 எரே 23:5 எசே 17:22-24 சகரி 6:12 மாற் 6:3 லூக் 2:7 லூக் 2:39 லூக் 2:40 லூக் 2:51 லூக் 2:52 லூக் 9:58 ரோம 8:3 பிலிப் 2:6 பிலிப் 2:7
3அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.ஏசா 49:7 ஏசா 50:6 சங் 22:6-8 சங் 69:10-12 சங் 69:19-12 சங் 69:20-12 மீகா 5:1 சகரி 11:8 சகரி 11:12 சகரி 11:13 மத் 26:67 மத் 27:39-44 மத் 27:63-44 மாற் 9:12 மாற் 15:19 லூக் 8:53 லூக் 9:22 லூக் 16:14 லூக் 23:18-25 யோவா 8:48 எபிரெ 12:2 எபிரெ 12:3
4மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.ஏசா 53:5 ஏசா 53:6 ஏசா 53:11 ஏசா 53:12 மத் 8:17 கலா 3:13 எபிரெ 9:28 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:2
5நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.ஏசா 53:6-8 ஏசா 53:11-8 ஏசா 53:12-8 தானி 9:24 சகரி 13:7 மத் 20:28 ரோம 3:24-26 ரோம 4:25 ரோம 5:6-10 ரோம 5:15-21 1கொரி 15:3 2கொரி 5:21 எபே 5:2 எபிரெ 9:12-15 எபிரெ 10:10 எபிரெ 10:14 1பேது 3:18
6நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.சங் 119:176 மத் 18:12-14 லூக் 15:3-7 ரோம 3:10-19 1பேது 2:25
7அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.மத் 26:63 மத் 27:12-14 மாற் 14:61 மாற் 15:5 லூக் 23:9 யோவா 19:9 1பேது 2:23
8இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.சங் 22:12-21 சங் 69:12 மத் 26:65 மத் 26:66 யோவா 19:7
9துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.மத் 27:57-60 மாற் 15:43-46 லூக் 23:50-53 யோவா 19:38-42 1கொரி 15:4
10கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.ஏசா 42:1 மத் 3:17 மத் 17:5
11அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.லூக் 22:44 யோவா 12:24 யோவா 12:27-32 யோவா 16:21 கலா 4:19 எபிரெ 12:2 வெளிப் 5:9 வெளிப் 5:10 வெளிப் 7:9-17
12அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.ஏசா 49:24 ஏசா 49:25 ஏசா 52:15 ஆதி 3:15 சங் 2:8 தானி 2:45 மத் 12:28 மத் 12:29 அப் 26:18 பிலிப் 2:8-11 கொலோ 1:13 கொலோ 1:14 கொலோ 2:15 எபிரெ 2:14 எபிரெ 2:15
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.