| 1 | எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. | ஏசா 51:9 ஏசா 51:17 தானி 10:9 தானி 10:16-19 ஆகா 2:4 எபே 6:10 |
| 2 | தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு. | ஏசா 3:26 ஏசா 51:23 எரே 51:6 எரே 51:45 எரே 51:50 சகரி 2:6 வெளிப் 18:4 |
| 3 | விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 45:13 ஏசா 50:1 சங் 44:12 எரே 15:13 1பேது 1:18 ரோம 7:14-25 |
| 4 | பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். | ஆதி 46:6 அப் 7:14 அப் 7:15 |
| 5 | இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 22:16 நியா 18:3 |
| 6 | இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | யாத் 33:19 யாத் 34:5-7 சங் 48:10 எசே 20:44 எசே 37:13 எசே 37:14 எசே 39:27-29 சகரி 10:9-12 எபிரெ 8:10 எபிரெ 8:11 |
| 7 | சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. | ஏசா 40:9 ஏசா 61:1-3 நாகூ 1:15 லூக் 2:10 ரோம 10:12-15 |
| 8 | உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள். | ஏசா 56:10 ஏசா 62:6 உன்ன 3:3 உன்ன 5:7 எரே 6:17 எரே 31:6 எரே 31:7 எசே 3:17 எசே 33:7 எபிரெ 13:17 |
| 9 | எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். | ஏசா 14:7 ஏசா 42:10 ஏசா 42:11 ஏசா 44:23 ஏசா 48:20 ஏசா 49:13 ஏசா 54:1-3 ஏசா 55:12 ஏசா 65:18 ஏசா 65:19 ஏசா 66:10-13 சங் 96:11 சங் 96:12 செப் 3:14 செப் 3:15 கலா 4:27 |
| 10 | எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். | ஏசா 51:9 ஏசா 66:18 ஏசா 66:19 சங் 98:1-3 அப் 2:5-11 வெளிப் 11:15-17 வெளிப் 15:4 |
| 11 | புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். | ஏசா 48:20 எரே 50:8 எரே 51:6 எரே 51:45 சகரி 2:6 சகரி 2:7 2கொரி 6:17 வெளிப் 18:4 |
| 12 | நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். | ஏசா 28:16 ஏசா 51:14 யாத் 12:33 யாத் 12:39 யாத் 14:8 |
| 13 | இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். | ஏசா 11:2 ஏசா 11:3 ஏசா 42:1 ஏசா 49:6 ஏசா 53:11 எசே 34:23 சகரி 3:8 பிலிப் 2:7 பிலிப் 2:8 |
| 14 | மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். | சங் 71:7 மத் 7:28 மத் 22:22 மத் 22:23 மத் 27:14 மாற் 5:42 மாற் 6:51 மாற் 7:37 மாற் 10:26 மாற் 10:32 லூக் 2:47 லூக் 4:36 லூக் 5:26 |
| 15 | அப்படியே, அவர் அநேகம் ஜாதிகளின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள். | எண் 8:7 எசே 36:25 மத் 28:19 அப் 2:33 தீத் 3:5 தீத் 3:6 எபிரெ 9:13 எபிரெ 9:14 எபிரெ 10:22 எபிரெ 11:28 எபிரெ 12:24 1பேது 1:2 |