| 1 | பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும். | ஏசா 21:9 ஏசா 41:6 ஏசா 41:7 யாத் 12:12 1சாமு 5:3 எரே 48:1-25 எரே 50:2 எரே 51:44 எரே 51:47 எரே 51:52 |
| 2 | அவைகள் ஏகமாய்க் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும். | ஏசா 36:18 ஏசா 36:19 ஏசா 37:12 ஏசா 37:19 ஏசா 44:17 ஏசா 45:20 |
| 3 | யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். | ஏசா 44:1 ஏசா 44:21 ஏசா 48:1 ஏசா 48:17 ஏசா 48:18 ஏசா 51:1 ஏசா 51:7 சங் 81:8-13 |
| 4 | உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். | ஏசா 41:4 ஏசா 43:13 ஏசா 43:25 சங் 92:14 சங் 102:26 சங் 102:27 மல்கி 2:16 மல்கி 3:6 ரோம 11:29 எபிரெ 1:12 எபிரெ 13:8 யாக் 1:17 |
| 5 | யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? | ஏசா 40:18 ஏசா 40:25 யாத் 15:11 சங் 86:8 சங் 89:6 சங் 89:8 சங் 113:5 எரே 10:6 எரே 10:7 எரே 10:16 பிலிப் 2:6 கொலோ 1:15 எபிரெ 1:3 |
| 6 | பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலி பொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். | ஏசா 40:19 ஏசா 40:20 ஏசா 41:6 ஏசா 41:7 ஏசா 44:12-19 ஏசா 45:20 யாத் 32:2-4 நியா 17:3 நியா 17:4 1இரா 12:28 எரே 10:3 எரே 10:4 எரே 10:9 எரே 10:14 ஓசி 8:4-6 ஆபகூ 2:18-20 அப் 17:29 |
| 7 | அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை. | 1சாமு 5:3 எரே 10:5 தானி 3:1 |
| 8 | இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள். | ஏசா 44:18-21 உபா 32:29 சங் 115:8 சங் 135:18 எரே 10:8 1கொரி 14:20 |
| 9 | முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. | ஏசா 42:9 ஏசா 65:17 உபா 32:7 நெகே 9:7-37 சங் 78:1-72 சங் 105:1-106 சங் 111:4 எரே 23:7 எரே 23:8 தானி 9:6-15 |
| 10 | அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, | ஏசா 41:22 ஏசா 41:23 ஏசா 44:7 ஏசா 45:21 ஆதி 3:15 ஆதி 12:2 ஆதி 12:3 ஆதி 49:10 ஆதி 49:22-26 எண் 24:17-24 உபா 4:24-31 உபா 28:15-68 அப் 15:18 |
| 11 | உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன். | ஏசா 13:2-4 ஏசா 21:7-9 ஏசா 41:2 ஏசா 41:25 ஏசா 45:1-6 எரே 50:29 எரே 51:20-29 |
| 12 | முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். | ஏசா 46:3 ஏசா 28:23 ஏசா 45:20 சங் 49:1 நீதி 1:22 நீதி 1:23 நீதி 8:1-5 எபே 5:14 வெளிப் 3:17 வெளிப் 3:18 |
| 13 | என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன். | ஏசா 51:5 ஏசா 61:11 ரோம 1:17 ரோம 3:21-26 ரோம 10:3-15 |