| 1 | கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: | ஏசா 13:3 ஏசா 44:28 1இரா 19:15 எரே 27:6 |
| 2 | நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். | ஏசா 13:4-17 |
| 3 | உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, | எரே 27:5-7 எரே 50:37 எரே 51:53 எசே 29:19 எசே 29:20 |
| 4 | வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன். | ஏசா 41:8 ஏசா 41:9 ஏசா 43:3 ஏசா 43:4 ஏசா 43:14 ஏசா 44:1 யாத் 19:5 யாத் 19:6 எரே 50:17-20 மத் 24:22 மாற் 13:20 ரோம 9:6 ரோம 11:7 |
| 5 | நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. | ஏசா 45:14-18 ஏசா 45:21-18 ஏசா 45:22-18 ஏசா 44:8 ஏசா 46:9 உபா 4:35 உபா 4:39 உபா 32:39 1இரா 8:60 யோவே 2:27 யோவா 1:1 எபிரெ 1:8 எபிரெ 1:9 |
| 6 | என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. | ஏசா 37:20 1சாமு 17:46 1சாமு 17:47 சங் 46:10 சங் 83:18 சங் 102:15 சங் 102:16 எசே 38:23 எசே 39:21 மல்கி 1:11 |
| 7 | ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். | ஆதி 1:3-5 ஆதி 1:17-5 ஆதி 1:18-5 சங் 8:3 சங் 104:20-23 எரே 31:35 2கொரி 4:6 யாக் 1:17 |
| 8 | வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன். | ஏசா 32:15 ஏசா 44:3 சங் 72:3 சங் 72:6 சங் 85:9-12 எசே 34:26 ஓசி 10:12 ஓசி 14:5-8 யோவே 2:28 யோவே 2:29 யோவே 3:18 அப் 2:33 தீத் 3:3-6 |
| 9 | மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ? | ஏசா 64:8 யாத் 9:16 யாத் 9:17 யோபு 15:24-26 யோபு 40:8 யோபு 40:9 சங் 2:2-9 நீதி 21:30 எரே 50:24 1கொரி 10:22 |
| 10 | தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! | உபா 27:16 மல்கி 1:6 எபிரெ 12:9 |
| 11 | இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள். | ஏசா 43:3 ஏசா 43:7 ஏசா 43:15 ஏசா 43:21 ஏசா 48:17 |
| 12 | நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். | ஏசா 45:18 ஏசா 40:28 ஏசா 42:5 ஆதி 1:26 ஆதி 1:27 சங் 102:25 எபிரெ 11:3 |
| 13 | நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 45:1-6 ஏசா 41:2 ஏசா 41:25 ஏசா 46:11 ஏசா 48:14 ஏசா 48:15 |
| 14 | எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 18:7 ஏசா 19:23-25 ஏசா 23:18 ஏசா 49:23 ஏசா 60:5-16 ஏசா 61:5 ஏசா 61:6 ஏசா 66:19 ஏசா 66:20 சங் 68:30 சங் 68:31 சங் 72:10-15 சகரி 8:22 சகரி 8:23 |
| 15 | இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர். | ஏசா 8:17 ஏசா 57:17 சங் 44:24 சங் 77:19 யோவா 13:7 ரோம 11:33 ரோம 11:34 |
| 16 | விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள். | ஏசா 45:20 ஏசா 41:19 ஏசா 42:17 ஏசா 44:9 ஏசா 44:11 சங் 97:7 எரே 2:26 எரே 2:27 எரே 10:14 எரே 10:15 |
| 17 | இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள். | ஏசா 45:25 ஏசா 26:4 ஓசி 1:7 ரோம 2:28 ரோம 2:29 ரோம 8:1 ரோம 11:26 1கொரி 1:30 1கொரி 1:31 2கொரி 5:17-21 பிலிப் 3:8 பிலிப் 3:9 1யோவா 4:15 |
| 18 | வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வெறொருவர் இல்லை. | ஏசா 42:5 எரே 10:12 எரே 51:15 |
| 19 | நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப் பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர். | ஏசா 43:9 ஏசா 43:10 ஏசா 48:16 உபா 29:29 உபா 30:11-14 நீதி 1:21 நீதி 8:1-4 யோவா 7:26 யோவா 7:28 யோவா 7:37-39 யோவா 18:20 அப் 2:4-8 |
| 20 | ஜாதிகளினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். | ஏசா 41:5 ஏசா 41:6 ஏசா 41:21 ஏசா 43:9 |
| 21 | நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை. | சங் 26:7 சங் 71:17 சங் 71:18 சங் 96:10 எரே 50:2 யோவே 3:9-12 |
| 22 | பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. | எண் 21:8 எண் 21:9 2நாளா 20:12 சங் 22:17 சங் 65:5 மீகா 7:7 சகரி 12:10 யோவா 3:13-16 யோவா 6:40 எபிரெ 12:2 |
| 23 | முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். | ஆதி 22:15-18 எரே 22:5 எரே 49:13 ஆமோ 6:8 எபிரெ 6:13-18 |
| 24 | கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். | ஏசா 45:25 ஏசா 54:17 ஏசா 61:10 எரே 23:5 எரே 23:6 1கொரி 1:30 2கொரி 5:21 2பேது 1:1 |
| 25 | இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள். | ஏசா 45:17 ஏசா 45:24 அப் 13:39 ரோம 3:24 ரோம 3:25 ரோம 5:1 ரோம 5:18 ரோம 5:19 ரோம 8:1 ரோம 8:30 ரோம 8:33 ரோம 8:34 1கொரி 6:11 2கொரி 5:21 |