இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 42

                   
புத்தகங்களைக் காட்டு
1இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.ஏசா 43:10 ஏசா 49:3-6 ஏசா 52:13 ஏசா 53:11 மத் 12:18-20 பிலிப் 2:7
2அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.சகரி 9:9 மத் 11:29 மத் 12:16-20 லூக் 17:20 2தீமோ 2:24 1பேது 2:23
3அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.ஏசா 35:3 ஏசா 35:4 ஏசா 40:11 ஏசா 40:29-31 ஏசா 50:4 ஏசா 50:10 ஏசா 57:15-18 ஏசா 61:1-3 ஏசா 66:2 சங் 103:13 சங் 103:14 சங் 147:3 எரே 30:12-17 எரே 31:18-20 எரே 31:25-20 எசே 34:16 மத் 11:28 மத் 18:11-14 லூக் 22:31 லூக் 22:32 யோவா 20:19-21 யோவா 20:27-21 எபிரெ 2:17 எபிரெ 2:18
4அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.ஏசா 9:7 ஏசா 49:5-10 ஏசா 52:13-15 ஏசா 53:2-12 யோவா 17:4 யோவா 17:5 எபிரெ 12:2-4 1பேது 2:22-24
5வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது:ஏசா 40:12 ஏசா 40:22 ஏசா 40:28 ஏசா 44:24 ஏசா 45:12 ஏசா 45:18 ஏசா 48:13 சங் 102:25 சங் 102:26 சங் 104:2-35 எரே 10:12 எரே 32:17 ஆமோ 9:6 சகரி 12:1 எபிரெ 1:2 எபிரெ 1:10-12
6நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,ஏசா 32:1 ஏசா 43:1 ஏசா 45:13 ஏசா 49:1-3 சங் 45:6 சங் 45:7 எரே 23:5 எரே 23:6 எரே 33:15 எரே 33:16 ரோம 3:25 ரோம 3:26 எபிரெ 1:8 எபிரெ 1:9 எபிரெ 7:2 எபிரெ 7:26
7கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும் ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.ஏசா 42:16 ஏசா 29:18 ஏசா 35:5 சங் 146:8 மத் 11:5 லூக் 24:45 யோவா 9:39 அப் 26:18 2கொரி 4:6 எபே 1:17 எபே 1:18 வெளிப் 3:18
8நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.யாத் 3:13-15 யாத் 4:5 சங் 83:18 யோவா 8:58
9பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஆதி 15:12-16 யோசு 21:45 யோசு 23:14 யோசு 23:15 1இரா 8:15-20 1இரா 11:36
10சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.ஏசா 24:14-16 ஏசா 44:23 ஏசா 49:13 ஏசா 65:14 சங் 33:3 சங் 40:3 சங் 96:1-3 சங் 98:1-4 சங் 117:1 சங் 117:2 ரோம 15:9-11 வெளிப் 5:9 வெளிப் 14:3
11வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியர் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.ஏசா 32:16 ஏசா 35:1 ஏசா 35:6 ஏசா 40:3 ஏசா 41:18 ஏசா 41:19 ஏசா 43:19 சங் 72:8-10
12கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.ஏசா 24:15 ஏசா 24:16 ஏசா 66:18 ஏசா 66:19 சங் 22:27 சங் 96:3-10 சங் 117:1 சங் 117:2 ரோம 15:9-11 வெளிப் 5:9 வெளிப் 5:10 வெளிப் 7:9-12
13கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.ஏசா 59:16-19 ஏசா 63:1-4 யாத் 15:1-3 சங் 78:65 சங் 110:5 சங் 110:6 எரே 25:30
14நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.யோபு 32:18 யோபு 32:20 சங் 50:2 சங் 83:1 சங் 83:2 பிரச 8:11 பிரச 8:12 எரே 15:6 எரே 44:22 லூக் 18:7 2பேது 3:9 2பேது 3:10 2பேது 3:15
15நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன்.ஏசா 2:12-16 ஏசா 11:15 ஏசா 11:16 ஏசா 44:27 ஏசா 49:11 ஏசா 50:2 சங் 18:7 சங் 107:33 சங் 107:34 சங் 114:3-7 எரே 4:24 நாகூ 1:4-6 ஆபகூ 3:6-10 ஆகா 2:6 சகரி 10:11 வெளிப் 6:12-17 வெளிப் 8:7-12 வெளிப் 11:13 வெளிப் 16:12 வெளிப் 16:18 வெளிப் 20:11
16குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.ஏசா 29:18 ஏசா 29:24 ஏசா 30:21 ஏசா 32:3 ஏசா 35:5 ஏசா 35:8 ஏசா 48:17 ஏசா 54:13 ஏசா 60:1 ஏசா 60:2 ஏசா 60:19 ஏசா 60:20 எரே 31:8 எரே 31:9 ஓசி 2:14 லூக் 1:78 லூக் 1:79 எபே 5:8
17சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.ஏசா 1:29 ஏசா 44:11 ஏசா 45:16 ஏசா 45:17 சங் 97:7 எரே 2:26 எரே 2:27 ஆபகூ 2:18-20
18செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்.ஏசா 29:18 ஏசா 43:8 யாத் 4:11 நீதி 20:12 மாற் 7:34-37 லூக் 7:22 வெளிப் 3:17 வெளிப் 3:18
19என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?ஏசா 6:9 ஏசா 29:9-14 ஏசா 56:10 எரே 4:22 எரே 5:21 எசே 12:2 மத் 13:14 மத் 13:15 மத் 15:14-16 மத் 23:16-24 மாற் 8:17 மாற் 8:18 யோவா 7:47-49 யோவா 9:39 யோவா 9:41 யோவா 12:40 ரோம 2:17-23 ரோம 11:7-10 ரோம 11:25-10 2கொரி 3:14 2கொரி 3:15 2கொரி 4:4
20நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான்.ஏசா 1:3 ஏசா 48:6-8 எண் 14:22 உபா 4:9 உபா 29:2-4 நெகே 9:10-17 சங் 106:7-13 சங் 107:43 யோவா 9:37-40 யோவா 11:37-50
21கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.ஏசா 1:24-27 ஏசா 46:12 ஏசா 46:13 சங் 71:16 சங் 71:19 சங் 85:9-12 தானி 9:24-27 மத் 3:17 மத் 5:17 மத் 17:5 யோவா 8:29 யோவா 15:10 ரோம 3:25 ரோம 3:26 2கொரி 5:19-21 பிலிப் 3:9
22இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.ஏசா 1:7 ஏசா 18:2 ஏசா 36:1 ஏசா 52:4 ஏசா 52:5 ஏசா 56:9 எரே 50:17 எரே 51:34 எரே 51:35 எரே 52:4-11 லூக் 19:41-44 லூக் 21:20-24
23உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்?ஏசா 1:18-20 ஏசா 48:18 லேவி 26:40-42 உபா 4:29-31 உபா 32:29 நீதி 1:22 நீதி 1:23 எரே 3:4-7 எரே 3:13-7 மீகா 6:9 மத் 21:28-31 அப் 3:19 அப் 3:22 அப் 3:23 1பேது 4:2 1பேது 4:3
24யாக்கோபைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவஞ்செய்து விரோதித்த கர்த்தர் அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே.ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 45:7 ஏசா 47:6 ஏசா 50:1 ஏசா 50:2 ஏசா 59:1 ஏசா 59:2 ஏசா 63:10 உபா 28:49 உபா 32:30 நியா 2:14 நியா 3:8 நியா 10:7 2நாளா 15:6 2நாளா 36:17 நெகே 9:26 நெகே 9:27 சங் 106:40-42 எரே 5:15 எரே 25:8 எரே 25:9 புலம் 1:14 புலம் 1:18 ஆமோ 3:6 மத் 22:7
25இவர்கள்மேல் அவர் தமது கோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும் வரப்பண்ணி, அவர்களைச்சூழ அக்கினிஜூவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதை மனதிலே வைக்காதேபோனார்கள்.லேவி 26:15-46 உபா 32:22 சங் 79:5 சங் 79:6 எசே 7:8 எசே 7:9 எசே 20:34 எசே 22:21 எசே 22:22 நாகூ 1:6 வெளிப் 16:1-21
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.