| 1 | இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். | ஏசா 43:7 ஏசா 43:15 ஏசா 43:21 ஏசா 44:2 ஏசா 44:21 சங் 100:3 சங் 102:18 எரே 31:3 எரே 33:24 எரே 33:26 எபே 2:10 |
| 2 | நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. | ஏசா 8:7-10 ஏசா 11:15 ஏசா 11:16 யாத் 14:29 யோசு 3:15-17 சங் 66:10 சங் 66:12 சங் 91:3-5 ஆமோ 9:8 ஆமோ 9:9 மத் 7:25-27 எபிரெ 11:29 |
| 3 | நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகரருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன். | ஏசா 30:11 ஏசா 41:14 ஏசா 45:15 ஏசா 45:21 ஏசா 49:26 ஏசா 60:16 ஓசி 13:4 தீத் 2:10-14 தீத் 3:4-6 யூதா 1:25 |
| 4 | நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன். | யாத் 19:5 யாத் 19:6 உபா 7:6-8 உபா 14:2 உபா 26:18 உபா 32:9-14 சங் 135:4 மல்கி 3:17 தீத் 2:14 1பேது 2:9 |
| 5 | பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன். | ஏசா 43:2 ஏசா 41:10 ஏசா 41:14 ஏசா 44:2 எரே 30:10 எரே 30:11 எரே 46:27 எரே 46:28 அப் 18:9 அப் 18:10 |
| 6 | நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், | ஏசா 18:7 எரே 3:14 எரே 3:18 எரே 3:19 ஓசி 1:10 ஓசி 1:11 ரோம 9:7 ரோம 9:8 ரோம 9:25 ரோம 9:26 2கொரி 6:17 2கொரி 6:18 கலா 3:26-29 |
| 7 | நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன். | ஏசா 62:2-5 ஏசா 63:19 எரே 33:16 அப் 11:26 யாக் 2:7 வெளிப் 3:12 |
| 8 | கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள். | ஏசா 6:9 ஏசா 42:18-20 ஏசா 44:18-20 உபா 29:2-4 எரே 5:21 எசே 12:2 2கொரி 4:4-6 |
| 9 | சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும். | ஏசா 45:20 ஏசா 45:21 ஏசா 48:14 சங் 49:1 சங் 49:2 சங் 50:1 யோவே 3:11 |
| 10 | நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. | ஏசா 43:12 ஏசா 44:8 யோவா 1:7 யோவா 1:8 யோவா 15:27 அப் 1:8 1கொரி 15:15 |
| 11 | நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. | ஏசா 43:3 ஏசா 12:2 ஏசா 45:21 ஏசா 45:22 உபா 6:4 ஓசி 1:7 ஓசி 13:4 லூக் 1:47 லூக் 2:11 யோவா 10:28-30 அப் 4:12 தீத் 2:10 தீத் 2:13 தீத் 3:4-6 2பேது 3:18 1யோவா 4:14 1யோவா 5:20 1யோவா 5:21 யூதா 1:25 வெளிப் 1:11 வெளிப் 1:17 வெளிப் 1:18 வெளிப் 7:10-12 |
| 12 | நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 37:7 ஏசா 37:35 ஏசா 37:36 ஏசா 46:10 ஏசா 48:4-7 |
| 13 | நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? | ஏசா 57:15 சங் 90:2 சங் 93:2 நீதி 8:23 மீகா 5:2 ஆபகூ 1:12 யோவா 1:1 யோவா 1:2 யோவா 8:58 1தீமோ 1:17 எபிரெ 13:8 வெளிப் 1:8 |
| 14 | நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார். | ஏசா 43:1 ஏசா 44:6 ஏசா 54:5-8 சங் 19:14 வெளிப் 5:9 |
| 15 | நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். | ஏசா 43:3 ஏசா 30:11 ஏசா 40:25 ஏசா 41:14 ஏசா 41:16 ஏசா 45:11 ஏசா 48:17 எரே 51:5 ஆபகூ 1:12 வெளிப் 3:7 |
| 16 | சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, | ஏசா 43:2 ஏசா 11:15 ஏசா 11:16 ஏசா 51:10 ஏசா 51:15 ஏசா 63:11-13 யாத் 14:16 யாத் 14:21 யாத் 14:29 யோசு 3:13-16 நெகே 9:11 சங் 74:13 சங் 74:14 சங் 77:19 சங் 78:13 சங் 106:9 சங் 114:3-5 சங் 136:13-15 எரே 31:35 வெளிப் 16:12 |
| 17 | இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது: | யாத் 14:4-9 யாத் 14:23-28 யாத் 15:4 சங் 46:8 சங் 46:9 சங் 76:5 சங் 76:6 எசே 38:8-18 |
| 18 | முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். | ஏசா 46:9 ஏசா 65:17 உபா 7:18 உபா 8:2 1நாளா 16:12 எரே 16:14 எரே 16:15 எரே 23:7 எரே 23:8 2கொரி 3:10 |
| 19 | இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். | ஏசா 42:9 ஏசா 48:6 எரே 31:22 வெளிப் 21:5 |
| 20 | நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும். | ஏசா 11:6-10 சங் 104:21 சங் 148:10 |
| 21 | இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். | ஏசா 50:7 ஏசா 60:21 ஏசா 61:3 சங் 4:3 சங் 102:18 நீதி 16:4 லூக் 1:74 லூக் 1:75 1கொரி 6:19 1கொரி 6:20 1கொரி 10:31 எபே 1:5-12 எபே 3:21 கொலோ 1:16 தீத் 2:14 எபிரெ 13:15 1பேது 2:9 |
| 22 | ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய். | ஏசா 64:7 சங் 14:4 சங் 79:6 எரே 10:25 தானி 9:13 ஓசி 7:10-14 ஓசி 14:1 ஓசி 14:2 யாக் 4:2 யாக் 4:3 |
| 23 | உன் ஆடுகளைத் தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன். | ஆமோ 5:25 மல்கி 1:13 மல்கி 1:14 மல்கி 3:8 |
| 24 | நீ எனக்குப் பணங்களால் சுகந்தபட்டையைக் கொள்ளாமலும், உன் பலிகளின் நிணத்தினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய். | யாத் 30:7 யாத் 30:23 யாத் 30:24 யாத் 30:34 எரே 6:20 |
| 25 | நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன். | ஏசா 43:11 ஏசா 1:18 ஏசா 44:22 சங் 51:9 எரே 50:20 மீகா 7:18 மீகா 7:19 மாற் 2:7 அப் 3:19 ரோம 5:20 |
| 26 | நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல். | ஏசா 1:18 ஆதி 32:12 யோபு 16:21 யோபு 23:3-6 யோபு 40:4 யோபு 40:5 சங் 141:2 எரே 2:21-35 எசே 36:37 ரோம 11:35 |
| 27 | உன் ஆதிதகப்பன் பாவஞ்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள். | எண் 32:14 சங் 78:8 சங் 106:6 சங் 106:7 எரே 3:25 எசே 16:3 சகரி 1:4-6 மல்கி 3:7 அப் 7:51 ரோம 5:12 |
| 28 | ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன். | ஏசா 47:6 2சாமு 1:21 சங் 89:39 புலம் 2:2 புலம் 2:6 புலம் 2:7 புலம் 4:20 |