| 1 | அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். | 2இரா 20:1-11 2நாளா 32:24 யோவா 11:1-5 அப் 9:37 பிலிப் 2:27-30 |
| 2 | அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: | 1இரா 8:30 சங் 50:15 சங் 91:15 மத் 6:6 |
| 3 | ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான். | நெகே 5:19 நெகே 13:14 நெகே 13:22 நெகே 13:31 சங் 18:20-27 சங் 20:1-3 எபிரெ 6:10 |
| 4 | அப்பொழுது எசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது: |
| 5 | நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன். | 2சாமு 7:3-5 1நாளா 17:2-4 |
| 6 | நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத்தப்புவித்து, இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன். | ஏசா 12:6 ஏசா 31:4 ஏசா 37:35 2நாளா 32:22 2தீமோ 4:17 |
| 7 | இதோ, ஆகாசுடைய சூரியகடியாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார். | ஏசா 38:22 ஏசா 7:11-14 ஏசா 37:30 ஆதி 9:13 நியா 6:17-22 நியா 6:37-39 2இரா 20:8-21 |
| 8 | தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று. | யோசு 10:12-14 2இரா 20:11 2நாளா 32:24 2நாளா 32:31 மத் 16:1 |
| 9 | யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது: | ஏசா 12:1-6 யாத் 15:1-21 நியா 5:1-31 1சாமு 2:1-10 சங் 18:1 சங் 30:11 சங் 30:12 சங் 107:17-22 சங் 116:1-4 சங் 118:18 சங் 118:19 யோனா 2:1-9 |
| 10 | நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். | ஏசா 38:1 யோபு 6:11 யோபு 7:7 யோபு 17:11-16 2கொரி 1:9 |
| 11 | கர்த்தரை, கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளோடே இருந்து மனுஷரை நான் காண்பதில்லை. | யோபு 35:14 யோபு 35:15 சங் 6:4 சங் 6:5 சங் 27:13 சங் 31:22 சங் 116:8 சங் 116:9 பிரச 9:5 பிரச 9:6 |
| 12 | என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர். | யோபு 7:7 சங் 89:45-47 சங் 102:11 சங் 102:23 சங் 102:24 |
| 13 | விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி, | 1இரா 13:24-26 1இரா 20:36 யோபு 10:16 யோபு 10:17 யோபு 16:12-14 சங் 39:10 சங் 50:22 சங் 51:8 தானி 6:24 ஓசி 5:14 1கொரி 11:30-32 |
| 14 | நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன். | யோபு 30:29 சங் 102:4-7 |
| 15 | நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன். | யோசு 7:8 எஸ்றா 9:10 சங் 39:9 சங் 39:10 யோவா 12:27 |
| 16 | ஆண்டவரே, இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர். | ஏசா 64:5 உபா 8:3 யோபு 33:19-28 சங் 71:20 மத் 4:4 1கொரி 11:32 2கொரி 4:17 எபிரெ 12:10 எபிரெ 12:11 |
| 17 | இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர். | யோபு 3:25 யோபு 3:26 யோபு 29:18 சங் 30:6 சங் 30:7 |
| 18 | பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. | சங் 6:5 சங் 30:9 சங் 88:11 சங் 115:17 சங் 115:18 பிரச 9:10 |
| 19 | நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான். | சங் 146:2 பிரச 9:10 யோவா 9:4 |
| 20 | கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான். | சங் 9:13 சங் 9:14 சங் 27:5 சங் 27:6 சங் 30:11 சங் 30:12 சங் 51:15 சங் 66:13-15 சங் 145:2 |
| 21 | அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான். | 2இரா 20:7 மாற் 7:33 யோவா 9:6 |
| 22 | அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான். | 2இரா 20:8 சங் 42:1 சங் 42:2 சங் 84:1 சங் 84:2 சங் 84:10-12 சங் 118:18 சங் 118:19 சங் 122:1 யோவா 5:14 |