| 1 | இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்; | ஏசா 2:22 |
| 2 | பராக்கிரமசாலியையும், யுத்தவீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையும், மூப்பனையும்; | ஏசா 2:13-15 2இரா 24:14-16 சங் 74:9 புலம் 5:12-14 ஆமோ 2:3 |
| 3 | ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார். | யாத் 18:21 உபா 1:15 1சாமு 8:12 |
| 4 | வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள். | 1இரா 3:7-9 2நாளா 33:1 2நாளா 34:1 2நாளா 36:2 2நாளா 36:5 2நாளா 36:9 2நாளா 36:11 பிரச 10:16 |
| 5 | ஜனங்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடும்பு செய்வான். | ஏசா 9:19-21 ஏசா 11:13 எரே 9:3-8 எரே 22:17 எசே 22:6 எசே 22:7 எசே 22:12 ஆமோ 4:1 மீகா 3:1-3 மீகா 3:11-3 சகரி 7:9-11 மல்கி 3:5 யாக் 2:6 யாக் 5:4 |
| 6 | அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப்பிடித்து: உனக்கு வஸ்திரம் இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல; | ஏசா 4:1 நியா 11:6-8 யோவா 6:15 |
| 7 | அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை வஸ்திரமுமில்லை; என்னை ஜனங்களுக்கு அதிபதியாக வைக்கவேண்டாம் என்பான். | ஆதி 14:22 உபா 32:40 வெளிப் 10:5 வெளிப் 10:6 |
| 8 | ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. | 2நாளா 28:5-7 2நாளா 28:18-7 2நாளா 33:11 2நாளா 36:17-19 எரே 26:6 எரே 26:18 புலம் 5:16 புலம் 5:17 மீகா 3:12 |
| 9 | அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். | ஏசா 3:16 1சாமு 15:32 2இரா 9:30 சங் 10:4 சங் 73:6 சங் 73:7 நீதி 30:13 எரே 3:3 எரே 6:15 தானி 7:20 |
| 10 | உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அனுபவிப்பார்கள். | ஏசா 26:20 ஏசா 26:21 பிரச 8:12 எரே 15:11 எசே 9:4 எசே 18:9-19 செப் 2:3 மல்கி 3:18 ரோம 2:5-11 |
| 11 | துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும். | ஏசா 48:22 ஏசா 57:20 ஏசா 57:21 ஏசா 65:13-15 ஏசா 65:20-15 சங் 1:3-5 சங் 11:5 சங் 11:6 பிரச 8:13 |
| 12 | பிள்ளைகள் என் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகள் அவர்களை ஆளுகிறார்கள். என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள். | ஏசா 3:4 2இரா 11:1 நாகூ 3:13 |
| 13 | கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார். | சங் 12:5 நீதி 22:22 நீதி 22:23 நீதி 23:10 நீதி 23:11 ஓசி 4:1 ஓசி 4:2 மீகா 6:2 |
| 14 | கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது. | யோபு 22:4 யோபு 34:23 சங் 143:2 |
| 15 | நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். | எசே 18:2 யோனா 1:6 |
| 16 | பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள். | ஏசா 1:8 ஏசா 4:4 மத் 21:5 லூக் 23:28 |
| 17 | ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார். | லேவி 13:29 லேவி 13:30 லேவி 13:43 லேவி 13:44 உபா 28:27 வெளிப் 16:2 |
| 18 | அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும், | நியா 8:21 |
| 19 | ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும், | ஆதி 24:22 ஆதி 24:30 ஆதி 24:53 ஆதி 38:18 ஆதி 38:25 யாத் 35:22 எண் 31:50 எசே 16:11 |
| 20 | சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும், | ஆதி 35:4 யாத் 32:2 எசே 16:12 ஓசி 2:13 |
| 21 | தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், | ஆதி 41:42 எஸ்தர் 8:12 உன்ன 5:14 லூக் 15:22 யாக் 2:2 |
| 22 | விநோத வஸ்திரங்களையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், |
| 23 | கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துபோடுவார். | யாத் 38:8 |
| 24 | அப்பொழுது, சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும், கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப் பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும். | ஏசா 57:9 நீதி 7:17 |
| 25 | உன் புருஷர் கட்கத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள். | 2நாளா 29:9 எரே 11:22 எரே 14:18 எரே 18:21 எரே 19:7 எரே 21:9 புலம் 2:21 ஆமோ 9:10 |
| 26 | அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார். | எரே 14:2 புலம் 1:4 |