| 1 | ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். | ஏசா 1:1 ஏசா 13:1 ஆமோ 1:1 மீகா 1:1 மீகா 6:9 ஆபகூ 1:1 |
| 2 | கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். | மீகா 4:1-3 |
| 3 | திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். | எரே 31:6 எரே 50:4 எரே 50:5 சகரி 8:20-23 |
| 4 | அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. | ஏசா 11:3 ஏசா 11:4 1சாமு 2:10 சங் 82:8 சங் 96:13 சங் 110:6 யோவா 16:8-11 அப் 17:31 வெளிப் 19:11 |
| 5 | யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். | ஏசா 2:3 ஏசா 50:10 ஏசா 50:11 ஏசா 60:1 ஏசா 60:19 சங் 89:15 லூக் 1:79 யோவா 12:35 யோவா 12:36 ரோம 13:12-14 எபே 5:8 1தெச 5:5 1தெச 5:6 1யோவா 1:7 வெளிப் 21:23 வெளிப் 21:24 |
| 6 | யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே. | உபா 31:16 உபா 31:17 2நாளா 15:2 2நாளா 24:20 புலம் 5:20 ரோம 11:1 ரோம 11:2 ரோம 11:20 |
| 7 | அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை. | உபா 17:16 உபா 17:17 1இரா 10:21-27 2நாளா 9:20-25 எரே 5:27 எரே 5:28 யாக் 5:1-3 வெளிப் 18:3 வெளிப் 18:11-17 |
| 8 | அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள். | ஏசா 57:5 2நாளா 27:2 2நாளா 28:2-4 2நாளா 28:23-25 2நாளா 33:3-7 எரே 2:28 எரே 11:13 எசே 16:23-25 ஓசி 12:11 அப் 17:16 |
| 9 | சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர். | ஏசா 5:15 சங் 49:2 எரே 5:4 எரே 5:5 ரோம 3:23 வெளிப் 6:15-17 |
| 10 | கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். | ஏசா 2:19-21 ஏசா 10:3 ஏசா 42:22 நியா 6:1 நியா 6:2 யோபு 30:5 யோபு 30:6 ஓசி 10:8 லூக் 23:30 வெளிப் 6:15 வெளிப் 6:16 |
| 11 | நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். | ஏசா 2:17 ஏசா 5:15 ஏசா 5:16 ஏசா 13:11 ஏசா 24:21 யோபு 40:10-12 சங் 18:27 எரே 50:31 எரே 50:32 மல்கி 4:1 லூக் 18:14 1பேது 5:5 |
| 12 | எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டு சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும், | ஏசா 13:6 ஏசா 13:9 எரே 46:10 எசே 13:5 ஆமோ 5:18 மல்கி 4:5 1கொரி 5:5 1தெச 5:2 |
| 13 | லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும், | ஏசா 10:33 ஏசா 10:34 ஏசா 14:8 ஏசா 37:24 எசே 31:3-12 ஆமோ 2:5 சகரி 11:1 சகரி 11:2 |
| 14 | உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும், | ஏசா 30:25 ஏசா 40:4 சங் 68:16 சங் 110:5 சங் 110:6 2கொரி 10:5 |
| 15 | உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும், |
| 16 | தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும். | ஏசா 23:1 1இரா 10:22 1இரா 22:48 1இரா 22:49 சங் 47:7 வெளிப் 18:17-19 |
| 17 | அப்பொழுது நரரின் மேட்டிமை தாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். | ஏசா 2:11 ஏசா 13:11 எரே 48:29 எரே 48:30 எசே 28:2-7 |
| 18 | விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம். | ஏசா 27:9 எசே 36:25 எசே 37:23 ஓசி 14:8 செப் 1:3 சகரி 13:2 |
| 19 | பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள். | ஏசா 2:10 ஏசா 2:21 1சாமு 13:6 1சாமு 14:11 எரே 16:16 ஓசி 10:8 மீகா 7:17 லூக் 23:30 எபிரெ 11:38 வெளிப் 6:15 வெளிப் 9:6 |
| 20 | பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துக்களிலும் புகுந்துகொள்ளும்படிக்கு, | ஏசா 30:22 ஏசா 31:7 ஏசா 46:1 ஓசி 14:8 பிலிப் 3:7 பிலிப் 3:8 |
| 21 | மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான். | ஏசா 2:10 ஏசா 2:19 யாத் 33:22 யோபு 30:6 உன்ன 2:14 |
| 22 | நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம். | சங் 62:9 சங் 146:3 எரே 17:5 |