இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 1

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக்கண்ட தரிசனம்.ஏசா 21:2 எண் 12:6 எண் 24:4 எண் 24:16 2நாளா 32:32 சங் 89:19 எரே 23:16 நாகூ 1:1 ஆபகூ 2:2 மத் 17:9 அப் 10:17 அப் 26:19 2கொரி 12:1
2வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.உபா 4:26 உபா 30:19 உபா 32:1 சங் 50:4 எரே 2:12 எரே 6:19 எரே 22:29 எசே 36:4 மீகா 1:2 மீகா 6:1 மீகா 6:2
3மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.நீதி 6:6 எரே 8:7
4ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.ஏசா 1:23 ஏசா 10:6 ஏசா 30:9 ஆதி 13:13 மத் 11:28 அப் 7:51 அப் 7:52 வெளிப் 18:5
5இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.ஏசா 9:13 ஏசா 9:21 எரே 2:30 எரே 5:3 எரே 6:28-30 எசே 24:13 எபிரெ 12:5-8
6உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.யோபு 2:7 யோபு 2:8 லூக் 16:20 லூக் 16:21
7உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாக பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது.ஏசா 5:5 ஏசா 5:6 ஏசா 5:9 ஏசா 6:11 ஏசா 24:10-12 லேவி 26:34 உபா 28:51 2நாளா 28:5 2நாளா 28:16-21 சங் 107:34 சங் 107:39 எரே 6:8
8சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கை போடப்பட்ட ஒரு பட்டணம்போலவும் மீந்திருக்கிறாள்.ஏசா 4:4 ஏசா 10:32 ஏசா 37:22 ஏசா 62:11 சங் 9:14 புலம் 2:1 சகரி 2:10 சகரி 9:9 யோவா 12:15
9சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.புலம் 3:22 ஆபகூ 3:2 ரோம 9:29
10சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.1இரா 22:19-23 ஆமோ 3:1 ஆமோ 3:8 மீகா 3:8-12
11உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை.ஏசா 66:3 1சாமு 15:22 சங் 50:8 சங் 51:16 நீதி 15:8 நீதி 21:27 எரே 6:20 எரே 7:21 ஆமோ 5:21 மீகா 6:7 மத் 9:13
12நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?ஏசா 58:1 ஏசா 58:2 யாத் 23:17 யாத் 34:23 உபா 16:16 பிரச 5:1 மத் 23:5
13இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.எசே 20:39 மல்கி 1:10 மத் 15:9 லூக் 11:42
14உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.ஏசா 61:8 ஆமோ 5:21
15நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.ஏசா 59:2 1இரா 8:22 1இரா 8:54 எஸ்றா 9:5 யோபு 27:8 யோபு 27:9 யோபு 27:20 சங் 66:18 சங் 134:2 நீதி 1:28 எரே 14:12 எசே 8:17 எசே 8:18 மீகா 3:4 சகரி 7:13 லூக் 13:25-28 1தீமோ 2:8
16உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;யோபு 11:13 யோபு 11:14 சங் 26:6 எரே 4:14 அப் 22:16 2கொரி 7:1 யாக் 4:8 வெளிப் 7:14
17நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.ஏசா 1:23 சங் 82:3 சங் 82:4 நீதி 31:9 எரே 22:3 எரே 22:15 எரே 22:16 தானி 4:27 மீகா 6:8 செப் 2:3 சகரி 7:9 சகரி 7:10 சகரி 8:16
18வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.ஏசா 41:21 ஏசா 43:24-26 1சாமு 12:7 எரே 2:5 மீகா 6:2 அப் 17:2 அப் 18:4 அப் 24:25
19நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.ஏசா 3:10 ஏசா 55:1-3 ஏசா 55:6-3 ஏசா 55:7-3 எரே 3:12-14 எரே 31:18-20 ஓசி 14:1-4 யோவே 2:26 மத் 21:28-32 எபிரெ 5:9
20மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.ஏசா 3:11 1சாமு 12:25 2நாளா 36:14-16 எபிரெ 2:1-3
21உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.ஏசா 48:2 நெகே 11:1 சங் 46:4 சங் 48:1 சங் 48:8 ஓசி 11:12 சகரி 8:3 எபிரெ 12:22
22உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது.எரே 6:28-30 புலம் 4:1 புலம் 4:2 எசே 22:18-22 ஓசி 6:4
23உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.ஏசா 3:14 2நாளா 24:17-21 2நாளா 36:14 எரே 5:5 எசே 22:6-12 தானி 9:5 தானி 9:6 ஓசி 7:3-5 ஓசி 9:15 மீகா 3:1-3 மீகா 3:11-3 அப் 4:5-11
24ஆகையால் சேனைகளின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது; ஓகோ, நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன்.ஏசா 30:29 ஏசா 49:26 ஏசா 60:16 எரே 50:34 வெளிப் 18:8
25நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.சகரி 13:7-9 வெளிப் 3:19
26உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய்.ஏசா 32:1 ஏசா 32:2 ஏசா 60:17 ஏசா 60:18 எண் 12:3 எண் 16:15 1சாமு 12:2-5 எரே 33:7 எரே 33:15-17 எசே 34:23 எசே 34:24 எசே 37:24 எசே 37:25 எசே 45:8
27சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.ஏசா 5:16 ஏசா 45:21-25 ரோம 3:24-26 ரோம 11:26 ரோம 11:27 2கொரி 5:21 எபே 1:7 எபே 1:8 தீத் 2:14 1பேது 1:18 1பேது 1:19
28துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டுபோவார்கள்; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.யோபு 31:3 சங் 1:6 சங் 5:6 சங் 37:38 சங் 73:27 சங் 92:9 சங் 104:35 சங் 125:5 நீதி 29:1 லூக் 12:45 லூக் 12:46 1தெச 5:3 2தெச 1:8 2தெச 1:9 2பேது 3:7 வெளிப் 21:8
29நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.ஏசா 30:22 ஏசா 31:7 ஏசா 45:16 எசே 16:63 எசே 36:31 ஓசி 14:3 ஓசி 14:8 ரோம 6:21
30இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்.ஏசா 5:6 எரே 17:5 எரே 17:6 எசே 17:9 எசே 17:10 எசே 17:24 மத் 21:19
31பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோகும் என்று சொல்லுகிறார்.எசே 32:21
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.