இணை வசன வேதாகமம்

Click to Subscribe

உன்னதப்பாட்டு 3

                   
புத்தகங்களைக் காட்டு
1இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.சங் 4:4 சங் 6:6 சங் 22:2 சங் 63:6-8 சங் 77:2-4 ஏசா 26:9
2நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.உன்ன 5:5 ஏசா 64:7 யோவா 1:6 மத் 26:40 மத் 26:41 ரோம 13:11 1கொரி 15:34 எபே 5:14
3நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.உன்ன 5:7 ஏசா 21:6-8 ஏசா 21:11-8 ஏசா 21:12-8 ஏசா 56:10 ஏசா 62:6 எசே 3:17 எசே 33:2-9 எபிரெ 13:17
4நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.உன்ன 6:12 நீதி 8:17 ஏசா 45:19 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 29:13 புலம் 3:25 மத் 7:7
5எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.உன்ன 2:7 உன்ன 8:4 மீகா 4:8
6வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?உன்ன 8:5 உபா 8:2 ஏசா 43:19 எரே 2:2 எரே 31:2 வெளிப் 12:6 வெளிப் 12:14
7இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றிநிற்கிறார்கள்.உன்ன 3:9 உன்ன 1:16
8இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.சங் 45:3 சங் 149:5-9 ஏசா 27:3 எபே 6:16-18
9சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.உன்ன 3:7 2சாமு 23:5 வெளிப் 14:6
10அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.சங் 87:3 1தீமோ 3:15 1தீமோ 3:16 வெளிப் 3:12
11சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.உன்ன 7:11 எபிரெ 13:13
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.