| 1 | நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். | சங் 85:11 ஏசா 35:1 ஏசா 35:2 |
| 2 | முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள். | ஏசா 55:13 மத் 6:28 மத் 6:29 மத் 10:16 பிலிப் 2:15 பிலிப் 2:16 1பேது 2:12 |
| 3 | காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது. | உன்ன 8:5 ஏசா 4:2 எசே 17:23 எசே 17:24 யோவா 15:1-8 |
| 4 | என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. | உன்ன 1:4 உன்ன 5:1 சங் 63:2-5 சங் 84:10 யோவா 14:21-23 வெளிப் 3:20 |
| 5 | திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன். | சங் 4:6 சங் 4:7 சங் 42:1 சங் 42:2 சங் 63:1-3 சங் 63:8-3 ஏசா 26:8 ஏசா 26:9 லூக் 24:32 பிலிப் 1:23 |
| 6 | அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது. | உன்ன 8:3-5 ஏசா 54:5-10 ஏசா 62:4 ஏசா 62:5 எரே 32:41 செப் 3:17 யோவா 3:29 எபே 5:25-29 |
| 7 | எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன். | மத் 26:63 |
| 8 | இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார். | உன்ன 5:2 யோவா 3:29 யோவா 10:4 யோவா 10:5 யோவா 10:27 வெளிப் 3:20 |
| 9 | என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். | உன்ன 2:17 உன்ன 8:14 |
| 10 | என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா. | உன்ன 2:8 2சாமு 23:3 சங் 85:8 எரே 31:3 |
| 11 | இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது. | பிரச 3:4 பிரச 3:11 ஏசா 12:1 ஏசா 12:2 ஏசா 40:2 ஏசா 54:6-8 ஏசா 60:1 ஏசா 60:2 மத் 5:4 எபே 5:8 வெளிப் 11:14 வெளிப் 11:15 |
| 12 | பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. | உன்ன 6:2 உன்ன 6:11 ஏசா 35:1 ஏசா 35:2 ஓசி 14:5-7 |
| 13 | அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா. | உன்ன 6:11 உன்ன 7:8 உன்ன 7:11-13 ஏசா 18:5 ஏசா 55:10 ஏசா 55:11 ஏசா 61:11 ஓசி 14:6 ஆகா 2:19 லூக் 13:6 லூக் 13:7 |
| 14 | கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார். | உன்ன 5:2 உன்ன 6:9 சங் 68:13 சங் 74:19 ஏசா 60:8 எசே 7:16 மத் 3:16 மத் 10:16 |
| 15 | திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே. | சங் 80:13 எசே 13:4-16 லூக் 13:32 2பேது 2:1-3 வெளிப் 2:2 |
| 16 | என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். | உன்ன 6:3 உன்ன 7:10 உன்ன 7:13 சங் 48:14 சங் 63:1 எரே 31:33 1கொரி 3:21-23 கலா 2:20 வெளிப் 21:2 வெளிப் 21:3 |
| 17 | என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும். | உன்ன 4:6 லூக் 1:78 ரோம 13:12 2பேது 1:19 |