இணை வசன வேதாகமம்

Click to Subscribe

உன்னதப்பாட்டு 1

                   
புத்தகங்களைக் காட்டு
1சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.சங் 14:1 ஏசா 5:1
2அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.உன்ன 5:16 உன்ன 8:1 ஆதி 27:26 ஆதி 27:27 ஆதி 29:11 ஆதி 45:15 சங் 2:12 லூக் 15:20 அப் 21:7 1பேது 5:14
3உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.உன்ன 3:6 உன்ன 4:10 உன்ன 5:5 உன்ன 5:13 யாத் 30:23-28 சங் 45:7 சங் 45:8 சங் 133:2 நீதி 27:9 பிரச 7:1 ஏசா 61:3 யோவா 12:3 2கொரி 2:14-16 பிலிப் 4:18
4என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.எரே 31:3 ஓசி 11:4 யோவா 6:44 யோவா 12:32 பிலிப் 2:12 பிலிப் 2:13
5எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்.ஏசா 53:2 மத் 10:25 1கொரி 4:10-13 1யோவா 3:1
6நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.ரூத் 1:19-21
7என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?உன்ன 2:3 உன்ன 3:1-4 உன்ன 5:8 உன்ன 5:10 உன்ன 5:16 சங் 18:1 சங் 116:1 ஏசா 5:1 ஏசா 26:9 மத் 10:37 யோவா 21:17 1பேது 1:8 1பேது 2:7
8ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.உன்ன 1:15 உன்ன 2:10 உன்ன 4:1 உன்ன 4:7 உன்ன 4:10 உன்ன 5:9 உன்ன 6:1 உன்ன 6:4-10 உன்ன 7:1-13 சங் 16:3 சங் 45:11 சங் 45:13 எபே 5:27 வெளிப் 19:7 வெளிப் 19:8
9என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.உன்ன 2:2 உன்ன 2:10 உன்ன 2:13 உன்ன 4:1 உன்ன 4:7 உன்ன 5:2 உன்ன 6:4 யோவா 15:14 யோவா 15:15
10ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.ஆதி 24:22 ஆதி 24:47 ஏசா 3:18-21 எசே 16:11-13 2பேது 1:3 2பேது 1:4
11வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.உன்ன 8:9 ஆதி 1:26 சங் 149:4 எபே 5:25-27 பிலிப் 3:21
12ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.உன்ன 7:5 சங் 45:1 மத் 22:11 மத் 25:34
13என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.உன்ன 4:6 உன்ன 4:14 உன்ன 5:1 உன்ன 5:5 உன்ன 5:13 ஆதி 43:11 சங் 45:8 யோவா 19:39
14என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.உன்ன 1:13 உன்ன 2:3
15என் பிரியமே! நீ ரூபவதி; நீ ருபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.உன்ன 1:8 உன்ன 4:1 உன்ன 4:7 உன்ன 4:10 உன்ன 5:12 உன்ன 7:6
16நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.உன்ன 2:3 உன்ன 5:10-16 சங் 45:2 சகரி 9:17 பிலிப் 3:8 பிலிப் 3:9 வெளிப் 5:11-13
17நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.உன்ன 8:9 2நாளா 2:8 2நாளா 2:9 சங் 92:12 1தீமோ 3:15 1தீமோ 3:16 எபிரெ 11:10 1பேது 2:4 1பேது 2:5
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.