| 1 | ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும். | பிரச 2:13 பிரச 2:14 1கொரி 2:13-16 |
| 2 | ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய். | நீதி 24:21 ரோம 13:1-4 தீத் 3:1 1பேது 2:13-17 |
| 3 | நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே: அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான். | பிரச 10:4 நீதி 14:29 |
| 4 | ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத் தக்கவன் யார்? | 1இரா 2:25 1இரா 2:29-34 1இரா 2:46-34 நீதி 19:12 நீதி 20:2 நீதி 30:31 தானி 3:15 லூக் 12:4 லூக் 12:5 ரோம 13:1-4 |
| 5 | கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும். | பிரச 8:2 யாத் 1:17 யாத் 1:20 யாத் 1:21 சங் 119:6 ஓசி 5:11 லூக் 20:25 அப் 4:19 அப் 5:29 ரோம 13:5-7 1பேது 3:13 1பேது 3:14 |
| 6 | எல்லாக் காரியத்துக்கும் காலமும் நியாயமுமுண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி. | பிரச 3:1 பிரச 3:11 பிரச 3:17 பிரச 7:13 பிரச 7:14 |
| 7 | இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்? | பிரச 6:12 பிரச 9:12 பிரச 10:14 நீதி 24:22 நீதி 29:1 மத் 24:44 மத் 24:50 மத் 25:6-13 1தெச 5:1-3 |
| 8 | ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது. | பிரச 3:21 2சாமு 14:14 யோபு 14:5 யோபு 34:14 சங் 49:6-9 சங் 89:48 எபிரெ 9:27 |
| 9 | இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன்; ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வெறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு. | பிரச 1:14 பிரச 3:10 பிரச 4:7 பிரச 4:8 பிரச 7:25 |
| 10 | பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே. | 2இரா 9:34 2இரா 9:35 யோபு 21:18 யோபு 21:32 யோபு 21:33 லூக் 16:22 |
| 11 | துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது. | யாத் 8:15 யாத் 8:32 யோபு 21:11-15 சங் 10:6 சங் 50:21 சங் 50:22 ஏசா 5:18 ஏசா 5:19 ஏசா 26:10 ஏசா 57:11 எரே 48:11 மத் 24:49 மத் 24:50 ரோம 2:4 ரோம 2:5 2பேது 3:3-10 |
| 12 | பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். | பிரச 5:16 பிரச 7:15 1இரா 2:5-9 1இரா 21:25 1இரா 22:34 1இரா 22:35 நீதி 13:21 ஏசா 65:20 ரோம 2:5 ரோம 9:22 2பேது 2:9 |
| 13 | துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை. | யோபு 18:5 யோபு 20:5 யோபு 21:30 சங் 11:5 ஏசா 57:21 மல்கி 3:18 மத் 13:49 மத் 13:50 யோவா 5:29 |
| 14 | பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன். | பிரச 4:4 பிரச 4:8 பிரச 9:3 பிரச 10:5 |
| 15 | ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே. | பிரச 2:24 பிரச 3:12 பிரச 3:13 பிரச 3:22 பிரச 5:18 பிரச 9:7-9 1தீமோ 4:3 1தீமோ 4:4 1தீமோ 6:17 |
| 16 | நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது, | பிரச 8:9 பிரச 8:7 பிரச 7:25 |
| 17 | தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக்கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான். | பிரச 3:11 பிரச 7:23 பிரச 7:24 பிரச 11:5 யோபு 5:9 யோபு 11:7-9 சங் 40:5 சங் 73:16 சங் 104:24 நீதி 30:3 நீதி 30:4 ஏசா 40:28 ரோம 11:33 |