1சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு; அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.பிரச 5:13 2அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.பிரச 5:19 1இரா 3:13 1நாளா 29:25 1நாளா 29:28 2நாளா 1:11 தானி 5:18 3ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பாக்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.ஆதி 33:5 1சாமு 2:20 1சாமு 2:21 2இரா 10:1 1நாளா 28:5 2நாளா 11:21 எஸ்தர் 5:11 சங் 127:4 சங் 127:5 நீதி 17:6 4அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.சங் 109:13 5அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.யோபு 3:10-13 யோபு 14:1 சங் 58:8 சங் 90:7-9 6அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?ஆதி 5:5 ஆதி 5:23 ஆதி 5:24 ஏசா 65:22 7மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே? அவன் மனதுக்கோ திருப்தியில்லை.ஆதி 3:17-19 நீதி 16:26 மத் 6:25 யோவா 6:27 1தீமோ 6:6-8 8இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?பிரச 2:14-16 பிரச 5:11 9ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.பிரச 2:24 பிரச 3:12 பிரச 3:13 பிரச 5:18 10இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.பிரச 1:9-11 பிரச 3:15 11மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன?பிரச 1:6-9 பிரச 1:17-9 பிரச 1:18-9 பிரச 2:3-11 பிரச 3:19 பிரச 4:1-4 பிரச 4:8-4 பிரச 4:16-4 பிரச 5:7 சங் 73:6 ஓசி 12:1 12நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?பிரச 2:3 பிரச 12:13 சங் 4:6 சங் 16:5 சங் 17:15 சங் 47:4 புலம் 3:24-27 மீகா 6:8