இணை வசன வேதாகமம்

Click to Subscribe

பிரசங்கி 4

                   
புத்தகங்களைக் காட்டு
1இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.யோபு 6:29 மல்கி 3:18
2ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்.பிரச 2:17 பிரச 9:4-6 யோபு 3:17-21
3இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.பிரச 6:3-5 யோபு 3:10-16 யோபு 10:18 யோபு 10:19 எரே 20:17 எரே 20:18 மத் 24:19 லூக் 23:29
4மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.ஆதி 4:4-8 ஆதி 37:2-11 1சாமு 18:8 1சாமு 18:9 1சாமு 18:14-16 1சாமு 18:29-16 1சாமு 18:30-16 நீதி 27:4 மத் 27:18 அப் 7:9 யாக் 4:5 1யோவா 3:12
5மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.நீதி 6:10 நீதி 6:11 நீதி 12:27 நீதி 13:4 நீதி 20:4 நீதி 24:33 நீதி 24:34
6வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.சங் 37:16 நீதி 15:16 நீதி 15:17 நீதி 16:8 நீதி 17:1
7பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன்.பிரச 4:1 சங் 78:33 சகரி 1:6
8ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை.பிரச 4:9-12 ஆதி 2:18 ஏசா 56:3-5
9ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.ஆதி 2:18 யாத் 4:14-16 எண் 11:14 நீதி 27:17 ஆகா 1:14 மாற் 6:7 அப் 13:2 அப் 15:39 அப் 15:40 1கொரி 12:18-21
10ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.யாத் 32:2-4 யாத் 32:21-4 உபா 9:19 உபா 9:20 1சாமு 23:16 2சாமு 11:27 2சாமு 12:7-14 யோபு 4:3 யோபு 4:4 ஏசா 35:3 ஏசா 35:4 லூக் 22:31 லூக் 22:32 கலா 2:11-14 கலா 6:1 1தெச 4:18 1தெச 5:11
11இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி?1இரா 1:1 1இரா 1:2
12ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.2சாமு 23:9 2சாமு 23:16 2சாமு 23:18 2சாமு 23:19 2சாமு 23:23 தானி 3:16 தானி 3:17 எபே 4:3
13இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.பிரச 9:15 பிரச 9:16 ஆதி 37:2 நீதி 19:1 நீதி 28:6 நீதி 28:15 நீதி 28:16
14அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.ஆதி 41:14 ஆதி 41:33-44 யோபு 5:11 சங் 113:7 சங் 113:8
15சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்.2சாமு 15:6
16அவர்களுக்குமுன் அப்படிச் செய்த ஜனங்களின் இலக்கத்திற்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.2சாமு 15:12 2சாமு 15:13 1இரா 1:5-7 1இரா 1:40-7 1இரா 12:10-16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.