| 1 | ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. | பிரச 3:17 பிரச 7:14 பிரச 8:5 பிரச 8:6 2இரா 5:26 2நாளா 33:12 நீதி 15:23 மத் 16:3 |
| 2 | பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு; | ஆதி 17:21 ஆதி 21:1 ஆதி 21:2 1சாமு 2:5 1இரா 13:2 2இரா 4:16 சங் 113:9 ஏசா 54:1 லூக் 1:13 லூக் 1:20 லூக் 1:36 யோவா 16:21 அப் 7:17 அப் 7:20 கலா 4:4 |
| 3 | கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு; | உபா 32:39 1சாமு 2:6 1சாமு 2:25 ஓசி 6:1 ஓசி 6:2 |
| 4 | அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு; | நெகே 8:9-12 நெகே 9:1-38 சங் 30:5 சங் 126:1 சங் 126:2 சங் 126:5 சங் 126:6 ஏசா 22:12 ஏசா 22:13 மத் 9:15 மத் 11:17 யோவா 16:20-22 ரோம 12:15 2கொரி 7:10 யாக் 4:9 |
| 5 | கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு; | யோசு 4:3-9 யோசு 10:27 2சாமு 18:17 2சாமு 18:18 2இரா 3:25 |
| 6 | தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு; | ஆதி 30:30-43 ஆதி 31:18 யாத் 12:35 யாத் 12:36 உபா 8:17 உபா 8:18 2இரா 5:26 2இரா 8:9 |
| 7 | கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு; | ஆதி 37:29 ஆதி 37:34 2சாமு 1:11 2சாமு 3:31 1இரா 21:27 2இரா 5:7 2இரா 6:30 எரே 36:24 யோவே 2:13 அப் 9:39 |
| 8 | சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு. | எசே 16:8 சங் 139:21 எபே 3:19 எபே 5:25 எபே 5:28 எபே 5:29 தீத் 2:4 |
| 9 | வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? | பிரச 1:3 பிரச 2:11 பிரச 2:22 பிரச 2:23 பிரச 5:16 நீதி 14:23 மத் 16:26 |
| 10 | மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். | பிரச 1:13 பிரச 1:14 பிரச 2:26 ஆதி 3:19 1தெச 2:9 2தெச 3:8 |
| 11 | அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். | பிரச 7:29 ஆதி 1:31 உபா 32:4 மாற் 7:37 |
| 12 | மகிழ்ச்சியாயிருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். | பிரச 3:22 பிரச 9:7-9 உபா 28:63 சங் 37:3 ஏசா 64:5 லூக் 11:41 அப் 20:35 பிலிப் 4:4-9 1தெச 5:15 1தெச 5:16 1தீமோ 6:18 |
| 13 | அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம். | பிரச 2:24 பிரச 5:18-20 பிரச 6:2 பிரச 9:7 உபா 28:30 உபா 28:31 உபா 28:47 உபா 28:48 நியா 6:3-6 சங் 128:2 ஏசா 65:21-23 |
| 14 | தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார். | சங் 33:11 சங் 119:90 சங் 119:91 ஏசா 46:10 தானி 4:34 தானி 4:35 அப் 2:23 அப் 4:28 ரோம 11:36 எபே 3:11 தீத் 1:2 யாக் 1:17 |
| 15 | முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார். | பிரச 1:9 பிரச 1:10 |
| 16 | பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதிஸ்தலத்தையும் கண்டேன்,. அங்கே அநீதி இருந்தது. | பிரச 4:1 பிரச 5:8 1இரா 21:9-21 சங் 58:1 சங் 58:2 சங் 82:2-5 சங் 94:21 சங் 94:22 ஏசா 59:14 மீகா 2:2 மீகா 7:3 செப் 3:3 மத் 26:59 அப் 23:3 யாக் 2:6 |
| 17 | சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன். | பிரச 1:16 பிரச 2:1 |
| 18 | மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன். | ஆதி 3:17-19 யோபு 14:1-4 யோபு 15:16 சங் 49:14 சங் 49:19 சங் 49:20 சங் 73:18 சங் 73:19 சங் 90:5-12 எபிரெ 9:27 1பேது 1:24 |
| 19 | மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. | பிரச 2:16 சங் 49:12 சங் 49:20 சங் 92:6 சங் 92:7 |
| 20 | எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. | பிரச 3:21 பிரச 6:6 பிரச 9:10 ஆதி 25:8 ஆதி 25:17 எண் 27:13 யோபு 7:9 யோபு 17:13 யோபு 30:24 சங் 49:14 |
| 21 | உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? | பிரச 12:7 லூக் 16:22 லூக் 16:23 யோவா 14:3 அப் 1:25 2கொரி 5:1 2கொரி 5:8 பிலிப் 1:23 |
| 22 | இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்? | பிரச 3:11 பிரச 3:12 பிரச 2:10 பிரச 2:11 பிரச 2:24 பிரச 5:18-20 பிரச 8:15 பிரச 9:7-9 பிரச 11:9 உபா 12:7 உபா 12:18 உபா 26:10 உபா 26:11 உபா 28:47 ரோம 12:11 ரோம 12:12 பிலிப் 4:4 பிலிப் 4:5 |