| 1 | செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். | யாத் 30:34 யாத் 30:35 |
| 2 | ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும். | பிரச 9:10 நீதி 14:8 லூக் 14:28-32 |
| 3 | மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான். | பிரச 5:3 நீதி 13:16 நீதி 18:2 நீதி 18:6 1பேது 4:4 |
| 4 | அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும். | பிரச 8:3 |
| 5 | நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே. | பிரச 4:7 பிரச 5:13 பிரச 6:1 பிரச 9:3 |
| 6 | மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். | நியா 9:14-20 1இரா 12:13 1இரா 12:14 எஸ்தர் 3:1 சங் 12:8 நீதி 28:12 நீதி 28:28 |
| 7 | வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன். | நீதி 19:10 நீதி 30:22 |
| 8 | படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். | நியா 9:5 நியா 9:53-57 2சாமு 17:23 2சாமு 18:15 எஸ்தர் 7:10 சங் 7:15 சங் 7:16 சங் 9:15 சங் 9:16 நீதி 26:27 |
| 9 | கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான். |
| 10 | இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம். | பிரச 10:15 பிரச 9:15-17 ஆதி 41:33-39 யாத் 18:19-23 1இரா 3:9 1நாளா 12:32 2நாளா 23:4-11 மத் 10:16 அப் 6:1-9 அப் 15:2-21 ரோம 16:19 1கொரி 14:20 எபே 5:15-17 கொலோ 4:5 யாக் 1:5 |
| 11 | தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன். | சங் 58:4 சங் 58:5 எரே 8:17 |
| 12 | ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். | யோபு 4:3 யோபு 4:4 யோபு 16:5 சங் 37:30 சங் 40:9 சங் 40:10 சங் 71:15-18 நீதி 10:13 நீதி 10:20 நீதி 10:21 நீதி 10:31 நீதி 10:32 நீதி 12:13 நீதி 12:14 நீதி 12:18 நீதி 15:2 நீதி 15:23 நீதி 16:21-24 நீதி 22:17 நீதி 22:18 நீதி 25:11 நீதி 25:12 நீதி 31:26 மத் 12:35 லூக் 4:22 எபே 4:29 கொலோ 4:6 |
| 13 | அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம். | நியா 14:15 1சாமு 20:26-33 1சாமு 22:7 1சாமு 22:8 1சாமு 22:16-18 1சாமு 25:10 1சாமு 25:11 2சாமு 19:41-43 2சாமு 20:1 2இரா 6:27 2இரா 6:31 நீதி 29:9 மத் 2:7 மத் 2:8 மத் 2:16 லூக் 6:2 லூக் 6:11 லூக் 11:38 லூக் 11:53 லூக் 11:54 யோவா 12:10 அப் 5:28-33 அப் 6:9-11 அப் 7:54-59 அப் 19:24-28 |
| 14 | மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்? | பிரச 5:3 நீதி 10:19 நீதி 15:2 |
| 15 | ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும். | பிரச 10:3 பிரச 10:10 ஏசா 44:12-17 ஏசா 47:12 ஏசா 47:13 ஏசா 55:2 ஏசா 57:1 ஆபகூ 2:6 மத் 11:28-30 |
| 16 | ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ! | 2நாளா 13:7 2நாளா 33:1-20 2நாளா 36:2 2நாளா 36:5 2நாளா 36:9 2நாளா 36:11 ஏசா 3:4 ஏசா 3:5 ஏசா 3:12 |
| 17 | ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது. | பிரச 10:6 பிரச 10:7 நீதி 28:2 நீதி 28:3 எரே 30:21 |
| 18 | மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும். | நீதி 12:24 நீதி 14:1 நீதி 20:4 நீதி 21:25 நீதி 23:21 நீதி 24:30 நீதி 24:31 எபிரெ 6:11 2பேது 1:5-10 |
| 19 | விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். | பிரச 2:1 பிரச 2:2 பிரச 7:2-6 ஆதி 43:34 தானி 5:1-12 1பேது 4:3 |
| 20 | ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும். | யாத் 22:28 ஏசா 8:21 அப் 23:5 |