| 1 | அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: | யோபு 2:11 |
| 2 | நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்? | யோபு 11:2 யோபு 11:3 யோபு 16:3 யோபு 18:2 யோபு 19:2 யோபு 19:3 யாத் 10:3 யாத் 10:7 நீதி 1:22 |
| 3 | தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? | யோபு 4:17 யோபு 9:2 யோபு 10:3 யோபு 19:7 யோபு 34:5 யோபு 34:12 யோபு 34:17-19 யோபு 40:8 ஆதி 18:25 உபா 32:4 2நாளா 19:7 எசே 18:25 எசே 33:17 எசே 33:20 சங் 89:14 தானி 9:14 ரோம 2:5 ரோம 3:4-6 |
| 4 | உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும், | யோபு 1:5 யோபு 1:18 யோபு 1:19 யோபு 5:4 யோபு 18:16-19 ஆதி 13:13 ஆதி 19:13-25 |
| 5 | நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து, | யோபு 5:8 யோபு 11:13 யோபு 22:21-23 யோபு 22:24-30 2நாளா 33:12 2நாளா 33:13 ஏசா 55:6 ஏசா 55:7 மத் 7:7 மத் 7:8 எபிரெ 3:7 எபிரெ 3:8 யாக் 4:7-10 |
| 6 | சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார். | யோபு 1:8 யோபு 4:6 யோபு 4:7 யோபு 21:14 யோபு 21:15 யோபு 16:17 சங் 26:5 சங் 26:6 நீதி 15:8 ஏசா 1:15 1தீமோ 2:8 1யோவா 3:19-22 |
| 7 | உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். | யோபு 42:12 யோபு 42:13 நீதி 4:18 சகரி 4:10 மத் 13:12 மத் 13:31 மத் 13:32 |
| 8 | ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். | யோபு 12:12 யோபு 15:10 யோபு 15:18 யோபு 32:6 யோபு 32:7 உபா 4:32 உபா 32:7 சங் 44:1 சங் 78:3 சங் 78:4 ஏசா 38:19 ரோம 15:4 1கொரி 10:11 |
| 9 | நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. | யோபு 7:6 ஆதி 47:9 1நாளா 29:15 சங் 39:5 சங் 90:4 சங் 102:11 சங் 144:4 |
| 10 | அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ? | யோபு 12:7 யோபு 12:8 யோபு 32:7 உபா 6:7 உபா 11:19 சங் 145:4 எபிரெ 11:4 எபிரெ 12:1 |
| 11 | சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? | யாத் 2:3 ஏசா 19:5-7 |
| 12 | அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ? | சங் 129:6 சங் 129:7 எரே 17:6 மத் 13:20 யாக் 1:10 யாக் 1:11 1பேது 1:24 |
| 13 | தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும். | உபா 6:12 உபா 8:11 உபா 8:14 உபா 8:19 சங் 9:17 சங் 10:4 சங் 50:22 ஏசா 51:13 |
| 14 | அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும். | ஏசா 59:5 ஏசா 59:6 |
| 15 | ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது. | யோபு 18:14 யோபு 27:18 சங் 52:5-7 சங் 112:10 நீதி 10:28 மத் 7:24-27 லூக் 6:47-49 |
| 16 | வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்; | யோபு 21:7-15 சங் 37:35 சங் 37:36 சங் 73:3-12 |
| 17 | அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும். | யோபு 18:16 யோபு 29:19 ஏசா 5:24 ஏசா 40:24 எரே 12:1 எரே 12:2 மாற் 11:20 யூதா 1:12 |
| 18 | அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும். | யோபு 7:10 யோபு 20:9 சங் 37:10 சங் 37:36 சங் 73:18 சங் 73:19 சங் 92:7 |
| 19 | இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள். | யோபு 20:5 மத் 13:20 மத் 13:21 |
| 20 | இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை. | யோபு 4:7 யோபு 9:22 சங் 37:24 சங் 37:37 சங் 94:14 |
| 21 | இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். | ஆதி 21:6 சங் 126:2 சங் 126:6 லூக் 6:21 |
| 22 | உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான். | சங் 35:26 சங் 109:29 சங் 132:18 1பேது 5:5 |