இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,சங் 2:12 சங் 32:1 சங் 32:2 சங் 34:8 சங் 84:12 சங் 106:3 சங் 112:1 சங் 115:12-15 சங் 119:1 சங் 119:2 சங் 144:15 சங் 146:5 உபா 28:2-68 உபா 33:29 எரே 17:7 மத் 16:17 லூக் 11:28 யோவா 13:17 யோவா 20:29 வெளிப் 22:14
2கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.சங் 40:8 சங் 112:1 சங் 119:11 சங் 119:35 சங் 119:47 சங் 119:48 சங் 119:72 சங் 119:92 யோபு 23:12 எரே 15:16 ரோம 7:22 1யோவா 5:3
3அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.யோபு 14:9 ஏசா 44:4 எரே 17:8 எசே 17:8 எசே 19:10 எசே 47:12 வெளிப் 22:2
4துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.சங் 35:5 யோபு 21:18 ஏசா 17:13 ஏசா 29:5 ஓசி 13:3 மத் 3:12
5ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.சங் 5:5 சங் 24:3 லூக் 21:36 யூதா 1:15
6கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.சங் 37:18-24 சங் 139:1 சங் 139:2 சங் 142:3 யோபு 23:10 நாகூ 1:7 யோவா 10:14 யோவா 10:27 2தீமோ 2:19
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.