| 1 | ஜாதிகள் கொந்தளிப்பானேன்? ஐனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? | சங் 18:42 சங் 46:6 சங் 83:4-8 ஏசா 8:9 லூக் 18:32 அப் 4:25 |
| 2 | கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: | சங் 2:10 சங் 48:4 சங் 110:5 மத் 2:16 லூக் 13:31 லூக் 23:11 லூக் 23:12 அப் 12:1-6 வெளிப் 17:12-14 |
| 3 | 'அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்' என்கிறார்கள். | எரே 5:5 லூக் 19:14 லூக் 19:27 1பேது 2:7 1பேது 2:8 |
| 4 | பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். | சங் 11:4 சங் 68:33 சங் 115:3 ஏசா 40:22 ஏசா 57:15 ஏசா 66:1 |
| 5 | அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசுவார். தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். | சங் 50:16-22 ஏசா 11:4 ஏசா 66:6 மத் 22:7 மத் 23:33-36 லூக் 19:27 லூக் 19:43 லூக் 19:44 வெளிப் 1:16 வெளிப் 19:15 |
| 6 | 'நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன்' என்றார். | சங் 45:6 சங் 89:27 சங் 89:36 சங் 89:37 சங் 110:1 சங் 110:2 ஏசா 9:6 ஏசா 9:7 தானி 7:13 தானி 7:14 மத் 28:18 அப் 2:34-36 அப் 5:30 அப் 5:31 எபே 1:22 பிலிப் 2:9-11 |
| 7 | தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, 'நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; | சங் 148:6 யோபு 23:13 ஏசா 46:10 |
| 8 | என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; | யோவா 17:4 யோவா 17:5 |
| 9 | இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்' என்று சொன்னார். | சங் 21:8 சங் 21:9 சங் 89:23 சங் 110:5 சங் 110:6 ஏசா 30:14 ஏசா 60:12 எரே 19:11 தானி 2:44 மத் 21:44 வெளிப் 2:26 வெளிப் 2:27 வெளிப் 12:5 |
| 10 | இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். | எரே 6:8 ஓசி 14:9 |
| 11 | பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். | சங் 89:7 எபிரெ 12:28 எபிரெ 12:29 |
| 12 | குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். | ஆதி 41:40 ஆதி 41:43 ஆதி 41:44 1சாமு 10:1 1இரா 19:18 ஓசி 13:2 யோவா 5:23 |