இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.2சாமு 15:1-18
2தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா)சங் 22:7 சங் 42:3 சங் 42:10 சங் 71:11 2சாமு 16:7 2சாமு 16:8 மத் 27:42 மத் 27:43
3ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.சங் 18:2 சங் 28:7 சங் 84:11 சங் 119:114 ஆதி 15:1 உபா 33:29
4நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் பதிலருளினார். (சேலா)சங் 22:2-5 சங் 34:6 சங் 50:15 சங் 66:17-19 சங் 86:3 சங் 86:4 சங் 91:15 சங் 116:1-4 சங் 130:1 சங் 130:2 சங் 138:3 சங் 142:1-3 ஏசா 65:24 எரே 29:12 எரே 29:13 மத் 7:7 யாக் 5:13
5நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.சங் 4:8 சங் 127:2 லேவி 26:6 யோபு 11:18 யோபு 11:19 நீதி 3:24 அப் 12:6
6எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.சங் 27:1-3 சங் 46:2 சங் 46:7 சங் 118:10-12 2இரா 6:15-17 ரோம 8:31
7கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.சங் 10:12 சங் 12:5 சங் 35:23 சங் 44:23 சங் 59:5 சங் 74:11 சங் 76:9 ஏசா 51:9 ஆபகூ 2:19
8இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா)சங் 37:39 சங் 37:40 நீதி 21:31 ஏசா 43:11 ஏசா 45:21 ஏசா 45:22 எரே 3:23 ஓசி 13:4 யோனா 2:9 அப் 4:12 வெளிப் 7:10 வெளிப் 19:1
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.