இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் பதிலருளும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பதைக் கேட்டருளும்.சங் 22:1 சங் 42:1 சங் 45:1 1நாளா 25:1-6
2மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)சங் 57:4 சங் 58:1 பிரச 8:11 பிரச 9:3
3பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.யாத் 33:16 எபே 2:10 2தெச 2:13 2தெச 2:14 2தீமோ 2:19 1பேது 2:9 2பேது 2:9
4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ் செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)சங் 2:11 சங் 33:8 சங் 119:161 எரே 5:22
5நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.சங் 50:14 சங் 51:19 உபா 33:19 2சாமு 15:12 ஏசா 1:11-18 ஏசா 61:8 மல்கி 1:8 மல்கி 1:11-14 மத் 5:23 மத் 5:23 எபிரெ 13:15 எபிரெ 13:16
6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்? என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.சங் 39:6 சங் 49:16-20 பிரச 2:3-26 ஏசா 55:2 லூக் 12:19 லூக் 16:19 யாக் 4:13 யாக் 5:1-5
7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.சங் 37:4 சங் 43:4 சங் 63:2-5 சங் 92:4 உன்ன 1:4 1பேது 1:8
8சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.சங் 3:5 சங் 16:8 யோபு 11:18 யோபு 11:19 நீதி 3:24 1தெச 4:13 1தெச 4:14 1தெச 5:10 வெளிப் 14:13
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.