| 1 | கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். | சங் 17:1 சங் 54:2 சங் 55:1 சங் 55:2 சங் 64:1 சங் 80:1 சங் 86:1 1பேது 3:12 1யோவா 5:14 1யோவா 5:15 |
| 2 | நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். | சங் 3:4 |
| 3 | கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். | சங் 22:2 சங் 55:17 சங் 69:16 சங் 88:13 சங் 119:147 சங் 130:6 ஏசா 26:9 மாற் 1:35 |
| 4 | நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. | சங் 50:21 1நாளா 29:17 ஆபகூ 1:13 மல்கி 2:17 |
| 5 | வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். | சங் 14:1 சங் 92:6 சங் 94:8 நீதி 1:7 நீதி 1:22 நீதி 8:5 பிரச 5:4 ஆபகூ 1:13 |
| 6 | பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். | சங் 4:2 வெளிப் 21:8 வெளிப் 22:15 |
| 7 | நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். | சங் 55:16 யோசு 24:15 லூக் 6:11 லூக் 6:12 |
| 8 | கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். | சங் 25:4 சங் 25:5 சங் 86:11 சங் 119:10 சங் 119:64 சங் 143:8-10 நீதி 3:5 நீதி 3:6 |
| 9 | அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள். | சங் 36:1-4 சங் 52:2 சங் 58:3 சங் 62:4 சங் 62:9 சங் 111:1-3 எரே 9:3-6 மீகா 6:12 ரோம 1:29-31 ரோம 3:13 |
| 10 | தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே. | ரோம 3:19 ரோம 3:20 |
| 11 | உம்மில் அடைக்கலம் புகுவோர் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. | சங் 35:27 சங் 40:16 சங் 58:10 சங் 68:3 சங் 70:1-4 நியா 5:31 ஏசா 65:13-16 வெளிப் 18:20 வெளிப் 19:1-7 |
| 12 | கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர். | சங் 1:1-3 சங் 3:8 சங் 29:11 சங் 112:1 சங் 115:13 |