| 1 | கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். | சங் 4:1 |
| 2 | என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன. | சங் 38:7 சங் 41:3 சங் 103:13-17 |
| 3 | என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர். | சங் 22:14 சங் 31:9 சங் 31:10 சங் 38:8 சங் 42:5 சங் 42:11 சங் 77:2 சங் 77:3 நீதி 18:14 மத் 26:38 |
| 4 | திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். | சங் 80:14 சங் 90:13 மல்கி 3:7 |
| 5 | மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? | சங் 30:9 சங் 88:10-12 சங் 115:17 சங் 118:17 ஏசா 38:18 ஏசா 38:19 |
| 6 | என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். | சங் 38:9 சங் 69:3 சங் 77:2-9 சங் 88:9 சங் 102:3-5 சங் 143:4-7 யோபு 7:3 யோபு 10:1 யோபு 23:2 |
| 7 | துயரத்தினால் என் கண் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று. | சங் 31:9 சங் 31:10 சங் 38:10 சங் 88:9 யோபு 17:7 புலம் 5:17 |
| 8 | அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். | சங் 119:115 சங் 139:19 மத் 7:23 மத் 25:41 லூக் 13:27 |
| 9 | கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். | சங் 3:4 சங் 31:22 சங் 40:1 சங் 40:2 சங் 66:19 சங் 66:20 சங் 118:5 சங் 120:1 சங் 138:3 யோனா 2:2 யோனா 2:7 2கொரி 12:8-10 |
| 10 | என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள். | சங் 5:10 சங் 7:6 சங் 25:3 சங் 35:26 சங் 40:14 சங் 40:15 சங் 71:13 சங் 83:16 சங் 83:17 சங் 86:17 சங் 109:28 சங் 109:29 சங் 112:10 சங் 132:18 ஏசா 26:11 எரே 20:11 |