இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 7

                   
புத்தகங்களைக் காட்டு
1என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.ஆபகூ 3:1
2சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.சங் 35:15 ஏசா 38:13
3என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும்,சங் 59:3 யோசு 22:22 1சாமு 20:8 1சாமு 22:8 1சாமு 22:13 1சாமு 24:9 1சாமு 26:18 1சாமு 26:19 2சாமு 16:7 2சாமு 16:8 யோபு 16:17-19
4என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,சங் 55:20 சங் 109:5 ஆதி 44:4 நீதி 17:3 எரே 18:20 எரே 18:21
5பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைப் புழுதியிலே தாழ்த்தக்கடவன். (சேலா)யோபு 31:5-10 யோபு 31:38-40
6கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.சங் 3:7 சங் 12:5 சங் 35:1 சங் 35:23 சங் 44:26 சங் 68:1 சங் 68:2 ஏசா 3:13
7ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.சங் 48:11 சங் 58:10 சங் 58:11 வெளிப் 11:17 வெளிப் 11:18 வெளிப் 16:5-7 வெளிப் 18:20 வெளிப் 19:2
8கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.சங் 9:8 சங் 11:4 சங் 82:1 சங் 96:13 சங் 98:9 ஆதி 18:25 அப் 17:31 ரோம 14:10-12 1கொரி 4:4 1கொரி 4:5
9துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.சங் 9:5 சங் 9:6 சங் 10:15 சங் 10:18 சங் 58:6 சங் 74:10 சங் 74:11 சங் 74:22 சங் 74:23 ஏசா 37:36-38 தானி 11:45 அப் 12:23
10செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது.சங் 3:3 சங் 18:1 சங் 18:2 சங் 84:11 சங் 89:18 ஆதி 15:1
11தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.சங் 7:8 சங் 94:15 சங் 140:12 சங் 140:13
12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.சங் 85:4 ஏசா 55:6 ஏசா 55:7 எரே 31:18 எரே 31:19 எசே 18:30 எசே 33:11 மத் 3:10 அப் 3:19
13அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.சங் 11:2 சங் 45:5 சங் 64:3 சங் 64:7 சங் 144:6 உபா 32:23 உபா 32:42 யோபு 6:4 புலம் 3:12 புலம் 3:13 ஆபகூ 3:11 ஆபகூ 3:13
14இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.யோபு 15:20 யோபு 15:35 ஏசா 33:11 ஏசா 59:4 ஏசா 59:5 யாக் 1:15
15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.சங் 35:7 சங் 119:85 யோபு 6:27 எரே 18:20
16அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.சங் 36:4 சங் 36:12 சங் 37:12 சங் 37:13 1சாமு 23:9 1சாமு 24:12 1சாமு 24:13 1சாமு 26:10 1சாமு 28:19 1சாமு 31:3 1சாமு 31:4 1இரா 2:32 எஸ்தர் 9:25 மல்கி 2:3-5
17நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.சங் 35:28 சங் 51:14 சங் 71:15 சங் 71:16 சங் 98:2 சங் 111:3 சங் 145:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.