| 1 | பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ? | யோபு 14:5 யோபு 14:13 யோபு 14:14 சங் 39:4 ஏசா 38:5 யோவா 11:9 யோவா 11:10 |
| 2 | ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல, | சங் 119:131 சங் 143:6 |
| 3 | மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான இராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது. | யோபு 29:2 சங் 6:6 சங் 39:5 பிரச 1:14 |
| 4 | நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்கு வெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்றுபோகிறது. | யோபு 7:13 யோபு 7:14 யோபு 17:12 யோபு 30:17 உபா 28:67 சங் 6:6 சங் 77:4 சங் 130:6 |
| 5 | என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. | யோபு 2:7 யோபு 2:8 யோபு 17:14 யோபு 19:26 யோபு 24:20 யோபு 30:18 யோபு 30:19 சங் 38:5-7 ஏசா 1:6 ஏசா 14:11 அப் 12:23 |
| 6 | என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும். | யோபு 9:25 யோபு 16:22 யோபு 17:11 சங் 90:5 சங் 90:6 சங் 102:11 சங் 103:15 சங் 103:16 சங் 144:4 ஏசா 38:12 ஏசா 38:13 ஏசா 40:6 ஏசா 40:7 யாக் 1:11 யாக் 4:14 1பேது 1:24 |
| 7 | என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும். | யோபு 10:9 ஆதி 42:36 நெகே 1:8 சங் 74:18 சங் 74:22 சங் 89:47 சங் 89:50 எரே 15:15 |
| 8 | இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். | யோபு 20:9 சங் 37:36 |
| 9 | மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான். | யோபு 37:11 |
| 10 | இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது. | யோபு 8:18 யோபு 20:9 சங் 103:16 |
| 11 | ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன். | யோபு 6:26 யோபு 10:1 யோபு 13:13 யோபு 16:6 யோபு 21:3 சங் 39:3 சங் 40:9 |
| 12 | தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ? | யோபு 7:17 யோபு 38:6-11 புலம் 3:7 |
| 13 | என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில், | யோபு 7:3 யோபு 7:4 யோபு 9:27 யோபு 9:28 சங் 6:6 சங் 77:4 |
| 14 | நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர். | ஆதி 40:5-7 ஆதி 41:8 நியா 7:13 நியா 7:14 தானி 2:1 மத் 27:19 |
| 15 | அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது. | 2சாமு 17:23 மத் 27:5 |
| 16 | இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே. | யோபு 3:20-22 யோபு 6:9 யோபு 10:1 ஆதி 27:46 1இரா 19:4 யோனா 4:3 யோனா 4:8 |
| 17 | மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், | சங் 8:4 சங் 144:3 எபிரெ 2:6 |
| 18 | காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? | யாத் 20:5 யாத் 32:34 ஏசா 26:14 ஏசா 38:12 ஏசா 38:13 |
| 19 | நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர். | யோபு 9:18 சங் 6:3 சங் 13:1-3 சங் 94:3 வெளிப் 6:10 |
| 20 | மன்னுயிரைக்காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன? | யோபு 9:29-31 யோபு 13:26 யோபு 14:16 யோபு 22:5 யோபு 31:33 யோபு 33:9 யோபு 33:27 சங் 80:4 |
| 21 | என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான். | யோபு 10:14 யோபு 13:23 யோபு 13:24 ஏசா 64:9 புலம் 3:42-44 புலம் 5:20-22 |