இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 22

                   
புத்தகங்களைக் காட்டு
1அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
2ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?யோபு 35:6-8 சங் 16:2 லூக் 17:10
3நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?1நாளா 29:17 சங் 147:10 சங் 147:11 நீதி 11:1 நீதி 11:20 நீதி 12:22 நீதி 15:8 மல்கி 2:17 பிலிப் 4:18
4அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?சங் 39:11 சங் 76:6 சங் 80:16 வெளிப் 3:19
5உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?யோபு 4:7-11 யோபு 11:14 யோபு 15:5 யோபு 15:6 யோபு 15:31-34 யோபு 21:27 யோபு 32:3
6முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.யோபு 24:3 யோபு 24:9 யாத் 22:26 உபா 24:10-18 எசே 18:7 எசே 18:12 எசே 18:16 ஆமோ 2:8
7விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.யோபு 31:17 உபா 15:7-11 சங் 112:9 நீதி 11:24 நீதி 11:25 நீதி 19:17 ஏசா 58:7 ஏசா 58:10 எசே 18:7 எசே 18:16 மத் 25:42 ரோம 12:20
8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.யோபு 29:7-17 யோபு 31:34 1இரா 21:11-15 சங் 12:8 மீகா 7:3
9விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.யோபு 24:3 யோபு 24:21 யோபு 29:12 யோபு 29:13 யோபு 31:16-18 யோபு 31:21-18 யாத் 22:21-24 உபா 27:19 சங் 94:6 ஏசா 1:17 ஏசா 1:23 ஏசா 10:2 எசே 22:7 மல்கி 3:5 லூக் 18:3-5
10ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.யோபு 18:8-10 யோபு 19:6 சங் 11:6
11நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.யோபு 18:6 யோபு 18:18 யோபு 19:8 நீதி 4:19 ஏசா 8:22 புலம் 3:2 யோவே 2:2 யோவே 2:3 மத் 8:12
12தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.சங் 115:3 சங் 115:16 பிரச 5:2 ஏசா 57:15 ஏசா 66:1
13நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?சங் 10:11 சங் 59:7 சங் 73:11 சங் 94:7-9 எசே 8:12 எசே 9:9 செப் 1:12
14அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.யோபு 34:22 சங் 33:14 சங் 97:2 சங் 139:1 சங் 139:2 சங் 139:11 சங் 139:12 எரே 23:24 லூக் 12:2 லூக் 12:3
15அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?ஆதி 6:5 ஆதி 6:11-13 லூக் 17:26 லூக் 17:27
16காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.யோபு 15:32 சங் 55:23 சங் 102:24 பிரச 7:17
17தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.யோபு 21:10 யோபு 21:14 யோபு 21:15 ஏசா 30:11 மத் 8:29 மத் 8:34 ரோம 1:28
18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.யோபு 12:6 1சாமு 2:7 சங் 17:14 எரே 12:2 அப் 14:17 அப் 15:16
19எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.சங் 48:11 சங் 58:10 சங் 97:8 சங் 107:42 நீதி 11:10 வெளிப் 18:20 வெளிப் 19:1-3
20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.யோபு 4:7 யோபு 8:3 யோபு 8:4 யோபு 15:5 யோபு 15:6 யோபு 20:18 யோபு 20:19 யோபு 21:27 யோபு 21:28 லூக் 13:1-5
21நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.1நாளா 28:9 யோவா 17:3 2கொரி 4:6
22அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.உபா 4:1 உபா 4:2 நீதி 2:1-9 1தெச 4:1 1தெச 4:2
23நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.யோபு 8:5 யோபு 8:6 யோபு 11:13 யோபு 11:14 ஏசா 55:6 ஏசா 55:7 ஓசி 14:1 ஓசி 14:2 சகரி 1:3 அப் 26:20
24அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.1இரா 10:21 2நாளா 1:5 2நாளா 9:10 2நாளா 9:27
25அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார்.ஆதி 15:1 சங் 18:2 சங் 84:11 ஏசா 41:10 ரோம 8:31
26அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.யோபு 27:10 யோபு 34:9 சங் 37:4 உன்ன 2:3 ஏசா 58:14 ரோம 7:22
27நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.சங் 50:14 சங் 50:15 சங் 66:17 சங் 66:18-20 சங் 91:15 சங் 116:1 ஏசா 58:9 1யோவா 5:14 1யோவா 5:15
28நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.சங் 20:4 சங் 90:17 புலம் 3:37 மத் 21:22 யாக் 4:15
29மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் இரட்சிக்கப்படுவார்கள்.யோபு 5:19-27 சங் 9:2 சங் 9:3 சங் 91:14-16 சங் 92:9-11
30குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.யோபு 42:8 ஆதி 18:26-32 ஏசா 58:12 எரே 5:1 அப் 27:24
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.