1யோபு பிரதியுத்தரமாக:2இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.யோபு 6:2 யோபு 10:1 புலம் 3:19 புலம் 3:20 சங் 77:2-9 3நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,யோபு 13:3 யோபு 16:21 யோபு 40:1-5 ஏசா 26:8 எரே 14:7 4என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.யோபு 13:18 யோபு 37:19 சங் 43:1 ஏசா 43:26 5அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.யோபு 10:2 யோபு 13:22 யோபு 13:23 யோபு 42:2-6 1கொரி 4:3 1கொரி 4:4 6அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.யோபு 9:19 யோபு 9:33 யோபு 9:34 யோபு 13:21 ஏசா 27:4 ஏசா 27:8 எசே 20:33 எசே 20:35 7அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன்.ஏசா 1:18 எரே 3:5 எரே 12:1 8இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.யோபு 9:11 சங் 10:1 சங் 13:1-3 ஏசா 45:15 1தீமோ 6:16 9இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.சங் 89:46 ஏசா 8:17 10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.ஆதி 18:19 2இரா 20:3 சங் 1:6 சங் 139:1-3 யோவா 21:17 2தீமோ 2:19 11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.1சாமு 12:2-5 சங் 18:20-24 சங் 44:18 அப் 20:18 அப் 20:19 அப் 20:33 அப் 20:34 2கொரி 1:12 1தெச 2:10 12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.யோவா 6:66-69 யோவா 8:31 அப் 14:22 எபிரெ 10:38 எபிரெ 10:39 1யோவா 2:19 13அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.யோபு 9:12 யோபு 9:13 யோபு 11:10 யோபு 12:14 யோபு 34:29 எண் 23:19 எண் 23:20 பிரச 1:15 பிரச 3:14 ரோம 9:19 யாக் 1:17 14எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.யோபு 7:3 மீகா 6:9 1தெச 3:3 1தெச 5:9 1பேது 2:8 15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.யோபு 23:3 யோபு 10:15 யோபு 31:23 சங் 77:3 சங் 119:120 ஆபகூ 3:16 16தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.சங் 22:14 ஏசா 6:5 ஏசா 57:16 17அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.யோபு 6:9 2இரா 22:20 ஏசா 57:1