இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 21

                   
புத்தகங்களைக் காட்டு
1யோபு பிரதியுத்தரமாக:
2என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும்.யோபு 13:3 யோபு 13:4 யோபு 18:2 யோபு 33:1 யோபு 33:31-33 யோபு 34:2 நியா 9:7 ஏசா 55:2 எபிரெ 2:1
3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள்.யோபு 13:13 யோபு 33:31-33
4நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா?யோபு 7:11-21 யோபு 10:1 யோபு 10:2 1சாமு 1:16 சங் 22:1-3 சங் 77:3-9 சங் 102:1 சங் 142:2 சங் 142:3 மத் 26:38
5என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.யோபு 2:12 யோபு 17:8 யோபு 19:20 யோபு 19:21
6இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.சங் 77:3 சங் 88:15 சங் 119:120 புலம் 3:19 புலம் 3:20 ஆபகூ 3:16
7துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?யோபு 12:6 சங் 17:10 சங் 73:3-12 எரே 12:1-3 ஆபகூ 1:15 ஆபகூ 1:16
8அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.யோபு 5:3 யோபு 5:4 யோபு 18:19 யோபு 20:10 யோபு 20:28 நீதி 17:6
9அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.யோபு 15:21 யோபு 18:11 சங் 73:19 ஏசா 57:19-21
10அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.யாத் 23:26 உபா 7:13 உபா 7:14 உபா 28:11 சங் 144:13 சங் 144:14 பிரச 9:1 பிரச 9:2 லூக் 12:16-21 லூக் 16:19
11அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.சங் 107:41 சங் 127:3-5
12அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.ஆதி 4:21 ஆதி 31:27 ஏசா 5:12 ஏசா 22:13 ஆமோ 6:4-6
13அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.யோபு 36:11 சங் 73:4 மத் 24:38 மத் 24:39 லூக் 12:19 லூக் 12:20 லூக் 17:28 லூக் 17:29
14அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;யோபு 22:17 சங் 10:4 சங் 10:11 லூக் 8:28 லூக் 8:37 ஆபகூ 1:15 யோவா 15:23 யோவா 15:24 ரோம 8:7
15சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.யாத் 5:2 சங் 12:4 நீதி 30:9 ஓசி 13:6
16ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.யோபு 1:21 யோபு 12:9 யோபு 12:10 சங் 49:6 சங் 49:7 சங் 52:5-7 பிரச 8:8 லூக் 16:2 லூக் 16:25
17எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.யோபு 18:5 யோபு 18:6 யோபு 18:18 நீதி 13:9 நீதி 20:20 நீதி 24:20 மத் 25:8
18அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.யோபு 13:25 யாத் 15:7 சங் 1:4 சங் 35:5 சங் 83:13 ஏசா 5:24 ஏசா 17:13 ஏசா 29:5 ஏசா 40:24 ஏசா 41:15 ஏசா 41:16 எரே 13:24 ஓசி 13:3 நாகூ 1:10 மத் 3:12
19தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.யோபு 22:24 உபா 32:34 மத் 6:19 மத் 6:20 ரோம 2:5
20அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.யோபு 27:19 லூக் 16:23
21அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?யோபு 14:21 பிரச 2:18 பிரச 2:19 லூக் 16:27 லூக் 16:28
22உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?யோபு 40:2 ஏசா 40:13 ஏசா 40:14 ஏசா 45:9 ரோம 11:34 1கொரி 2:16
23ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.யோபு 20:22 யோபு 20:23 சங் 49:17 சங் 73:4 சங் 73:5 லூக் 12:19-21
24அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.யோபு 15:27 சங் 17:10
25வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல், மனக்கிலேசத்தோடே சாகிறான்.யோபு 3:20 யோபு 7:11 யோபு 9:18 யோபு 10:1 2சாமு 17:8 நீதி 14:10 ஏசா 38:15-17
26இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.யோபு 3:18 யோபு 3:19 யோபு 20:11 பிரச 9:2
27இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.யோபு 4:8-11 யோபு 5:3-5 யோபு 8:3-6 யோபு 15:20-35 யோபு 20:5 யோபு 20:29 லூக் 5:22
28பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறீர்கள்?யோபு 20:7 சங் 37:36 சங் 52:5 சங் 52:6 ஆபகூ 2:9-11 சகரி 5:4
29வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?சங் 129:8
30துன்மார்க்கன் ஆபத்து நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.நீதி 16:4 நாகூ 1:2 2பேது 2:9-17 2பேது 3:7 யூதா 1:13
31அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாகத் தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்குத் தக்க பலனை அவனுக்குச் சரிக்கட்டுகிறவன் யார்?2சாமு 12:7-12 1இரா 21:19-24 சங் 50:21 எரே 2:33-35 மாற் 6:18 அப் 24:25 கலா 2:11
32அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.சங் 49:14 எசே 32:21-32 லூக் 16:22
33பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனதுபோல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்குச் செல்லுவார்கள்.யோபு 3:17 யோபு 3:18
34நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் செல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்.யோபு 16:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.