| 1 | அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக: | யோபு 2:11 யோபு 11:1 யோபு 42:9 |
| 2 | இதற்காக மறு உத்தரவு கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன். | யோபு 20:3 யோபு 4:2 யோபு 13:19 யோபு 32:13-20 சங் 39:2 சங் 39:3 எரே 20:9 ரோம 10:2 |
| 3 | நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது. | யோபு 19:29 |
| 4 | துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும் என்பதையும், | யோபு 8:8 யோபு 8:9 யோபு 15:10 யோபு 32:7 |
| 5 | அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? | யோபு 5:3 யோபு 15:29-34 யோபு 18:5 யோபு 18:6 யோபு 27:13-23 யாத் 15:9 யாத் 15:10 நியா 16:21-30 எஸ்தர் 5:11 எஸ்தர் 5:12 எஸ்தர் 7:10 சங் 37:35 சங் 37:36 சங் 73:18-20 அப் 12:22 அப் 12:23 |
| 6 | அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும், | ஆதி 11:4 ஏசா 14:13 ஏசா 14:14 தானி 4:11 தானி 4:22 ஆமோ 9:2 ஒபதி 1:3 ஒபதி 1:4 மத் 11:23 |
| 7 | அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள். | 1இரா 14:10 2இரா 9:37 சங் 83:10 எரே 8:2 |
| 8 | அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான். | சங் 73:20 சங் 18:10 சங் 90:5 ஏசா 29:7 ஏசா 29:8 |
| 9 | அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை. | யோபு 20:7 யோபு 7:8 யோபு 7:10 யோபு 8:18 யோபு 27:3 சங் 37:10 சங் 37:36 சங் 103:15 சங் 103:16 |
| 10 | அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும். | நீதி 28:3 |
| 11 | அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும். | யோபு 13:26 யோபு 19:20 சங் 25:7 நீதி 5:11-13 நீதி 5:22-13 நீதி 5:23-13 எசே 32:27 |
| 12 | பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி, | யோபு 15:16 ஆதி 3:6 நீதி 9:17 நீதி 9:18 நீதி 20:17 பிரச 11:9 |
| 13 | அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும், | மத் 5:29 மத் 5:30 மாற் 9:43-49 ரோம 8:13 |
| 14 | அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும். | 2சாமு 11:2-5 2சாமு 12:10 2சாமு 12:11 சங் 32:3 சங் 32:4 சங் 38:1-8 சங் 51:8 சங் 51:9 நீதி 1:31 நீதி 23:20 நீதி 23:21 நீதி 23:29-35 எரே 2:19 மல்கி 2:2 |
| 15 | அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார். | நீதி 23:8 மத் 27:3 மத் 27:4 |
| 16 | அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும். | ரோம 3:13 |
| 17 | தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை. | எண் 14:23 2இரா 7:2 எரே 17:6-8 லூக் 16:24 |
| 18 | தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும்; அவன் களிகூராதிருப்பான். | யோபு 20:10 யோபு 20:15 |
| 19 | அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப் பறித்தபடியினாலும், | யோபு 21:27 யோபு 21:28 யோபு 22:6 யோபு 24:2-12 யோபு 31:13-22 யோபு 31:38-22 யோபு 31:39-22 யோபு 35:9 1சாமு 12:3 1சாமு 12:4 சங் 10:18 சங் 12:5 நீதி 14:31 நீதி 22:22 நீதி 22:23 பிரச 4:1 பிரச 5:8 எசே 22:29 ஆமோ 4:1-3 யாக் 2:6 யாக் 2:13 யாக் 5:4 |
| 20 | தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை. | பிரச 5:13 பிரச 5:14 ஏசா 57:20 ஏசா 57:21 |
| 21 | அவன் போஜனத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவன் ஆஸ்தி நிலைநிற்பதில்லை. | யோபு 18:19 எரே 17:11 லூக் 16:24 லூக் 16:25 |
| 22 | அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும். | யோபு 15:29 யோபு 18:7 சங் 39:5 பிரச 2:18-20 வெளிப் 18:7 |
| 23 | தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு, அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார். | எண் 11:33 சங் 78:30 சங் 78:31 மல்கி 2:2 லூக் 12:17-20 |
| 24 | இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும். | 1இரா 20:30 ஏசா 24:18 எரே 48:43 எரே 48:44 ஆமோ 5:19 ஆமோ 9:1-3 |
| 25 | உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் பிச்சையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும். | யோபு 16:13 உபா 32:41 2சாமு 18:14 சங் 7:12 |
| 26 | அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான். | யோபு 18:5 யோபு 18:6 ஏசா 8:22 மத் 8:12 யூதா 1:13 |
| 27 | வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும். | சங் 44:20 சங் 44:21 எரே 29:23 மல்கி 3:5 லூக் 12:2 லூக் 12:3 ரோம 2:16 1கொரி 4:5 |
| 28 | அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்து போகும். | யோபு 20:10 யோபு 20:18-22 யோபு 5:5 யோபு 27:14-19 2இரா 20:17 வெளிப் 18:17 |
| 29 | இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் சுதந்தரமுமாம் என்றான். | யோபு 18:21 யோபு 27:13 யோபு 31:2 யோபு 31:3 உபா 29:20-28 சங் 11:5 சங் 11:6 மத் 24:51 |